For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி ஏய்ப்பு.. வியாட்நாமில் பெரும் தொழிலதிபருக்கு 30 ஆண்டு சிறை!!

Google Oneindia Tamil News

வியாட்நாம்: வியாட்நாமில் கோடிக்கணக்கான டாலர்கள் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அந்நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபரான ங்யுயென் டுக் கியெனுக்கு முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன.

முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு நெருக்கமாக இருந்தவர்.ஆட்சியில் இருந்துவருகின்ற கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி சண்டைகளின் விளைவாகத்தான் கியெனுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

English summary
A Vietnamese court jailed a tycoon and former banker for 30 years on Monday for his part in a series of elaborate financial scams worth $1.1 billion that have become one of the country's most high-profile banking scandals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X