For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைனில் பெரிய அடி! ஆர்வமில்லாத ரஷ்ய வீரர்கள்! மத்திய கிழக்கிலிருந்து பெரிய டீமை களமிறக்கும் புடின்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரிடுவதற்காக 16 ஆயிரம் பேரை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து களமிறக்குவதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    Ukraine Labல் Viruses! Pathogens பற்றி Warn செய்த WHO | OneIndia Tamil

    உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக 15 நாட்கள் ஆகிறது. இதுவரையிலான போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்ய தரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.

    இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

    இதுவரை இந்த போரில் ரஷ்யா முழு பலத்தை பயன்படுத்தவில்லை. ரஷ்யா மிகவும் குறைவாகவே தாக்குதல் நடத்தி வருகிறது.

    தன்னார்வலர்கள்

    தன்னார்வலர்கள்

    அதேபோல் வான்வெளி தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் நடத்தவில்லை. இந்த போரில் உக்ரைன் தரப்பில் பலர் தன்னார்வலர்களாக போரிட்டு வருகிறார்கள். அந்நாட்டு பொது மக்கள் பலர் ராணுவத்தில் தன்னார்வலர்களாக இணைந்து போராடி வருகிறார்கள். அதேபோல் ஐரோப்பாவை சேர்ந்த பலரும் உக்ரைனுக்கு சென்று அங்கு போராடி வருகின்றனர். அண்டை ஐரோப்பா நாடுகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் பலர் உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக போரிட்டு வருகின்றனர்.

    16 ஆயிரம் பேர்

    16 ஆயிரம் பேர்

    இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் தன்னார்வலர்கள் பலர் களமிறங்க உள்ளனர். ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக 16 ஆயிரம் பேர் போர் செய்ய உள்ளனர். இவர்கள் எல்லோரும் மொத்தமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து களமிறக்கப்பட உள்ளனர். இந்த போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன.

    ரஷ்ய படைகள்

    ரஷ்ய படைகள்

    ரஷ்ய படைகள் ஆர்வமின்றி இருக்கின்றன. ஏற்கனவே ரஷ்ய படையில் 15 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதோடு உக்ரைனில் தாக்குதல் நடத்த சில ரஷ்ய வீரர்களுக்கே ஆர்வம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்தே தற்போது ரஷ்ய அதிபர் புடின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 16 ஆயிரம் தன்னார்வலர்கள் போரில் களமிறக்கப்பட உள்ளனர்.

    எங்கிருந்து?

    எங்கிருந்து?

    சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமீரகத்தில் உள்ள நாடுகளில் இருந்தும் வீரர்கள் பலர் ரஷ்ய படைக்கு ஆதரவாக களமிறங்க உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் ரஷ்யாவிற்கு உதவ வேண்டும் என்று வருகிறார்கள். பணம் வேண்டும் என்று இவர்கள் வரவில்லை. அதனால் இவர்களை ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிட அனுமதிக்க போகிறோம் என்று ரஷ்ய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    புடின் மனமாற்றம்

    புடின் மனமாற்றம்

    முதலில் இவர்களை ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிட புடின் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரஷ்ய படைகளின் மதிப்பை அது குறைவாக மதிப்பிடுவது போல இருக்கும். இதனால் தன்னார்வலர்களை புடின் அனுமதிக்கவில்லை. ஆனால் போரில் ரஷ்ய தரப்பிற்கு சேதம் அதிகரித்து வருவதால் தற்போது தன்னார்வலர்களை அனுமதிக்கும் முடிவை புடின் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Russia President Putin to deploy Middle East volunteer fighters against Ukraine war to red forces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X