ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவதே அமெரிக்காதான்... ரஷ்யா வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ ஆதாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அமெரிக்கா உதவுவதாக ரஷ்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறது என்று விளக்கப்பட்டு இருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தளவாடங்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்படி சுற்றி வளைத்து பாதுக்காக்கின்றனர் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் கடைசியில் இந்த வீடியோவை ரஷ்யா பாதுகாப்பு துறை தன்னுடையுஞ் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. அவர்கள் வீடியோவை நீக்கியதற்கு பின்பாக முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு உதவும் அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு உதவும் அமெரிக்கா

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை நேற்று டிவிட்டரில் முக்கியமான வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு உதவுகிறது என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த வீடியோ வெளியான சில நிமிடத்தில் வைரல்ஆனது. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு பணம் கொடுத்து உதவுவதும் அமெரிக்கா தான் என அதில் விளக்கி இருந்தது.

 அமெரிக்கா எப்படி உதவுகிறது

அமெரிக்கா எப்படி உதவுகிறது

இந்த வீடியோவில் சிரியா- ஈராக் பார்டரில் நடக்கும் சம்பவங்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அதில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அழிக்காமல் அமெரிக்க அரணாக சுற்றி வளைத்து இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வாகனங்களை பராமரிப்பதும், அவர்களுக்கு நிறைய போர் முறைகளை சொல்லிக் கொடுப்பதும் இடம் பெற்று உள்ளது.

 எல்லாமே பொய்

எல்லாமே பொய்

திடீர் என்று மாலையில் அந்த வீடியோவை ரஷ்யாவின் பாதுகாப்பு துறை டெலிட் செய்தது. அது உண்மையான வீடியோ இல்லை வெறும் வீடியோ கேம் என்பதால் அதை டெலிட் செய்து இருக்கிறது. போர் செய்வது போன்ற வீடியோ கேமான பிரபல ''ஏசி-130 வீடியோ கேமில் இருந்து ரஷ்யா சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறது. ரஷ்யா விளக்கிய சம்பவங்கள் எல்லாமே அந்த வீடியோவில் அடங்கி இருப்பது.

சோஷியல் மீடியாவில் கலாய்த்த நெட்டிசன்ஸ்

ரஷ்யாவின் இந்த மோசமான செயலுக்கு சோஷியல் மீடியாவில் பெரிய எதிர்ப்பு வந்து இருக்கிறது. பலரும் ''நல்லா முயற்சி பண்ணி இருக்கீங்க இன்னும் பண்ணுங்க'' என்று ரஷ்யாவை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ பொய் யாரும் நம்பாதீர்கள் என நிறைய பேர், அவர்கள் கேம் விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Russia releases a videogame as proof that America helps ISIS. Russia's defence ministry's official account has released this video.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற