இங்க பாருங்க.. உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன், ரஷ்ய படைகள்.. அம்பலப்படுத்திய சாட்டிலைட் படம்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் உள்ளது. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அதிகரித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளன.
Recommended Video
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.
மேலும் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.

ஒரு லட்சம் வீரர்கள்
ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் போருக்கு ரஷ்யா வழிவகுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன.ஆனால் ரஷ்யா, பயிற்சிக்கு தான் படைகளை குவித்துள்ளதாகவும், போர் தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும் மறுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

செயற்கைகோள் படங்கள்
இந்நிலையில் தான் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள படைகள் குறித்த படங்கள் வெளியாகி உள்ளன. மேக்சர் நிறுவன (Maxar) உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட செயற்கைகோள் பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷ்யாவில் படம் எடுத்துள்ளன. இதில் ரஷ்ய படைகள் ஏராளமாக குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு ரெடி
இதன்மூலம் தரைவழி, வான்வெளி தாக்குதலுக்கு தயார் நிலையில் ரஷ்யா இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் பெரும்பாலான படைகள் உக்ரைனின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளை நோக்கி உள்ளது. மேலும் உக்ரைன் தென்கிழக்கு, கிரிமியாவில் அதிகளவில் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு உதவ வாய்ப்பு
இதற்கிடையே படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்க உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகின்றன. ஆனால் ரஷ்யா பிடிகொடுக்காமல் உள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்க உள்பட பிற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கவும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications