காதலியைக் கொன்று, மூளையைத் தின்று... இளகிய மனம் கொண்டோர் இந்த செய்தியை படிக்காதீங்க...!
ரஷ்யாவில் பெண்ணின் மூளையை இளைஞர் ஒருவர் வறுத்து தின்ற கொடூரம் நடந்துள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் பெண்ணை அவரது காதலன் ஒருவர் கொன்றுவிட்டு அவரது மூளையை வறுத்து சாப்பிட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி லூச்சின் (21). இவரது காதலி ஓல்கா புடுனோவா (45). இருவருக்கும் 24 வயது வித்தியாசம். எனினும் இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சர்வதேச பெண்கள் திம் கொண்டாட்டத்துக்காக வால்டாயில் உள்ள ஓல்காவின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஓல்காவை டிமிட்ரி கொன்றுவிட்டார்.

திடுக் தகவல்
இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் டிமிட்ரியை கைது செய்தனர். கொலை தொடர்பாக டிமிட்ரியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ஓல்காவும், டிமிட்ரியும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

ஓல்கா சரிந்தார்
இதையடுத்து மதுபாட்டிலால் ஓல்காவின் தலையில் 25 முறை அடித்துள்ளார் டிமிட்ரி. இதனால் ஓல்கா சரிந்து விழுந்து இறந்தார். இதையடுத்து ஓல்காவின் மண்டை ஓட்டை டிமிட்ரி உடைத்தார். அதிலிருந்து ரத்தத்தை ஒரு பாட்டிலில் பிடித்தார்.

மூளையை வெளியே எடுத்தார்
இங்கே விருந்து இருக்கிறது சாத்தான்களே வாருங்கள் என அழைத்தார். ஒரு 5 நிமிடம் காத்திருந்தார். பின்னர் அதிலிருந்து மூளையை வெளியே எடுத்தார். மண்டை ஓட்டு ரத்தத்தை மடக்கென குடித்தார்.

வறுத்து உண்டார்
இதையடுத்து மூளையின் சிறு பகுதியை எடுத்து வறுத்தார். அதை உண்டார். அதன் ருசி அவருக்கு பிடித்திருக்கவே மீதியையும் வறுத்து தின்றார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான டிமிட்ரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதிக ஆர்வம்
சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிட்ரி லிசின், மனிதர்களைக் கொன்று தின்னும் சடங்குகள் குறித்து வாசிப்பார். அதுபோலவே காதலி ஓல்காவை கொன்றது தெரியவந்துள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications