For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச்சரிக்கை விடுத்த பைடன்.. அப்படிலாம் ஒன்னும் இல்லையே..பின்வாங்கிய ரஷ்யா..தாக்குதல் எண்ணம் இல்லையாம்

Google Oneindia Tamil News

மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா சில நாட்களுக்குள் போர் தொடுக்க அதிக ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ள சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்த விதமான திட்டமும் தங்களிடம் இல்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கம் கூறியுள்ளது.

சோவியத் யூனியனில் இருந்து உடைந்த உக்ரைனுக்கும், வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்! உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!

பங்காளி சண்டை போல அவ்வப்போது இரு நாடுகளும் உரசிக் கொண்டாலும் அதன் பின்னணியில் நேட்டோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருப்பதால் ரஷ்யா பதுங்கி பாய காத்திருக்கிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது பதற்றம் ஏற்படுவது வழக்கம்.

உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரம்

கடந்த சில நாட்களாக நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் நிராகரிக்கப்பட்டதால் தற்போது மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் ராணுவ தளவாடங்களையும் ரஷ்யா குவித்துள்ளதாலும் அங்கு போர் மேகம் சூழ்ந்து உள்ளது.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

ஒருபுறம் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும் மறுபுறம் ஆயிரக்கணக்கான ராணுவத் துருப்புகளை அங்கு குவித்து வருவது சாட்டிலைட் படங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியது. அப்போதும் தங்களுக்கு தாக்குதல் நோக்கம் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்திருந்தார். ரஷ்யா எந்த நேரத்திலும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி உக்ரைன் மீது சில நாட்களுக்குள் தாக்குதலை நடத்தும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

ரஷ்யா மறுப்பு

ரஷ்யா மறுப்பு

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என ரஷ்ய வெளியுறவு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கருத்துக்களுக்கு பதிலை வெளியிட்டு உள்ளது. அதில் நாட்டின் சில பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகளை பெறுவதற்கான அழைப்புகள் மிகவும் நியாயமற்றது என அந்த அறிக்கையில் கூறியுள்ள ரஷ்ய உள்துறை அமைச்சகம், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

எண்ணம் இல்லை

எண்ணம் இல்லை

நாட்டின் சிவப்புக் கோடுகள் என கருதப்படும் எல்லைப் பகுதிகளில் முக்கிய பாதுகாப்பு நலன்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான இறையாண்மை உரிமை ஆகியவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என கூறியுள்ள ரஷ்யா, "ரஷ்ய மண்ணில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து படையினரை திரும்பப் பெறுவதற்கான இறுதி கோரிக்கைகள், கடுமையான பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல்களுடன், ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் உண்மையான ஒப்பந்தங்களைத் தாக்கும் வாய்ப்புகளை பாதிக்கின்றன" என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

English summary
The Russian Foreign Ministry has said it has no plans to launch an attack on Ukraine, shortly after US President Joe Biden warned that Russia was at high risk of launching a war on Ukraine in a few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X