For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’குரூப்பில் டூப்’ போடுகிறாரா புடின்? அதென்ன பாடி டபுள்?‘டூப்’ பயன்படுத்திய ஒசாமா முதல் ஸ்டாலின் வரை!

Google Oneindia Tamil News

மாஸ்கோ : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் 'பாடி டபுள்' எனும் தன்னைப் போலவே இருக்கும் வேறு நபரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்திருப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில் உண்மையில் பாடி டபுள் என்றால் என்ன அதனை இதுவரை எந்தெந்த உலக தலைவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்..

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்களை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருவதாக உலக நாடுகளிடம் அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து பயனில்லாமல் போனது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒருபுறம் இருந்தாலும், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட வாழ்க்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்! 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்!

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

பல செய்தி நிறுவனங்கள் நீண்ட காலமாக ரஷ்ய அவரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். பல இடங்களில் அவரது கைகள் நடுங்குவதைக் காணலாம் எனவும், அவரது முகம் உள்ள புது வகையான மேக்கப் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதை காட்டுவதாகவும், புதின் இளமையாக இருந்தபோது எடுக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டு, புடின் தனது வயது மற்றும் உடல் உபாதைகளை மறைக்க மேக்கப் போட்டு இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

பாடி டபுள்

பாடி டபுள்

மேலும் பார்க்கின்சன் எனப்படும் மறதி நோயாலும் புற்றுநோயாலும் புதின் அவதிப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனிடைய பொதுவெளியில் நடமாட முடியாமல் இருக்கும் ரஷ்ய அதிபர் புடின் மேற்படி தன்னை போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு நபரை பொதுவெளியில் பயன்படுத்தியதாகவும் இதற்கான சான்றுகள் பல உள்ளன என உக்ரைன் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒரே தோற்றம் கொண்ட நபர்

ஒரே தோற்றம் கொண்ட நபர்

இது குறித்து பேசிய உக்ரைன் நாட்டின் உளவு பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கைரின் புடனோவ் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட விளாடிமிர் புடின் புகைப்படங்களில் அவரது காதுகளில் நீளம் மாறுபடுவதாகவும் அவருக்கு புற்றுநோய் தாக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு ஐரோப்பிய ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் ரஷ்யா தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் பாடி டபுள் எனும் ஒரே தோற்றம் கொண்ட நபர்களை பயன்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறதா?

 உலக தலைவர்கள்

உலக தலைவர்கள்

அப்படி இல்லை, அதிபர் புடின் மட்டுமல்ல உலகில் இதற்கு முன்னதாக பல உலகத் தலைவர்கள் எதிரிகளிடம் இருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்காகவும் பல்வேறு அரசியல் வியூகங்களுக்காகவும் தங்களைப் போன்ற உருவம் உள்ள நபர்களை பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் ஜெர்மன் முன்னாள் அதிபர் அடாஃப் ஹிட்லர், ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலின், ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட பலர் உலகமெங்கிலும் தங்களைப் போலவே தோற்றம் உள்ள நபர்களை டூப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

English summary
Russian President Vladimir Putin has been accused of hiring a body doubl to appear at public events. ; ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ’பாடி டபுள்’ எனும் தன்னைப் போலவே இருக்கும் வேறு நபரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்திருப்பதாக புகார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X