மக்களோடு மக்களாக ரஷ்ய வீரர்கள்... காடு, வீடு, என உலவி.. உக்ரைன் தலைநகரை கைப்பற்ற பிளான்!
கீவ்: உக்ரைனின் இர்பின் பகுதியில் காடுகள் வழியே நுழையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்களின் வீ்டுகளுக்குள் நுழைந்து சாதாரண உடைகளை அணிந்து உலா வந்து உளவு பார்க்கின்றனர். இதை தடுக்க உக்ரைன் ராணுவத்தின் சிறப்பு படை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 7 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றுவது என்பது ரஷ்ய படைகளுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ரஷ்ய வீரர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் உக்ரைன் வடக்கு பகுதியில் கீவ் நகருக்கு அருகேஉள்ள இர்பின் நகரில் ரஷ்ய வீரர்கள் நுழைந்து சதிச்செயல்களை அரங்கேற் உதவி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

வீடுகளுக்குள் ரஷ்ய வீரர்கள்
இர்வின் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்கள் வீடுகளுக்குள் சென்று அங்குள்ள ஆடைகளை எடுத்து சாதாரண உக்ரைன் மக்கள் போன்று வலம் வருகின்றனர். இவர்கள் அருகே உள்ள காடுகளின் மூலம் நகருக்குள் நுழைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் ராணுவம், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் ரஷ்ய வீரர்களின் ஊடுருவலை தடுக்க ராணுவம், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கியால் சுடுகின்றனர்.
இதுபற்றி இர்பின் நகரில் வசிக்கும் ஆண்ட்ரி லெவன்சுக் கூறுகையில், ‛‛உள்ளூர்வாசிகள் போல் நடமாடும் நபர்கள் மற்றவர்களை துப்பாக்கியால் சுடுகின்றனர். இவர்கள் ரஷ்ய படை வீரர்கள். காடுகள் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து ஆடைகளை திருடி சாதாரண மனிதர்கள் போன்று சுதந்திரமாக உலா வருகின்றனர். இவர்கள் உடைந்து கிடக்கும் பாலத்தின் கம்பிகள் வழியே வேகமாக செல்வது ஆச்சரியமளிக்கிறது'' என்றார்.

ராணுவம் விழிப்பு
இதனை இர்வின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசும் உறுதி செய்துள்ளார். இதனால் ராணுவத்தினரும் விழிப்புடன் செயல்பட துவங்கி உள்ளனர். மேலும் கீவ் நகரை கைப்பற்றி உக்ரைனை சிதைப்பதில் ரஷ்ய ராணுவம் அனைத்து படைகளை பயன்படுத்துவதோடு, சிறப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் ராணுவத்தினர் கூறினார்

தாக்குதலுக்கு உதவ...
இதுகுறித்து ஸ்பியர் படை தளபதி விக்டர் செலோவன் கூறுகையில், ‛இர்வினில் எங்கள் படை வீரர்கள் உள்ளனர். சந்தேகப்படும் படியாக யாரெனும் சுற்றினால் எங்களுக்கு தகவல் அளிக்க கூறியுள்ளோம். அதன்படி தற்போது தகவல்கள் கொடுத்து வருகின்றனர். நாச வேலையில் ஈடுபடும் நபர்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம். இவ்வாறு நுழைந்துள்ள சதிக்காரர்கள் ரஷ்யாவின் வான்வெளி, பீரங்கி தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவத்துக்கு உதவி வருகின்றனர். இவர்கள் உதவியுடன் படிப்படியாக முன்னேற ரஷ்ய ராணுவத்தின் முடிவு செய்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

மூன்று வகைகள்
இவ்வாறு நாசவேலைக்காக வந்துள்ளவர்கள் ரஷ்ய சிறப்பு படை, ராணுவ உளவுத்துறையை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் மூன்று வகை குழுக்களாக இருக்கலாம். முதல் குழு ரஷ்ய படைகள் முன்னேறி செல்வதற்கான வழிவகைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும். 2வது குழுவை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும். 3வது குழுவை சேர்ந்தவர்கள் உக்ரைன் தலைவர்களை கொல்லும் செயலை அரங்கேற்றலாம் எனவும், இவர்கள் போருக்கு முன்பே நகருக்குள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என உக்ரைன் ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
Recommended Video

பள்ளங்கள்...
இதற்கிடையே ரஷ்ய ராணுவத்தினர் நுழைவை தடுக்க உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில் உள்ள முக்கிய பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகள் அமைத்துள்ளதோடு, சில இடங்களில் ராட்சத பள்ளங்களை ஏற்படுத்தி ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications