சிரியாவில் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற வானிலை நிலவுகிறது... ரஷ்ய டிவியின் "வெதர் ரிப்போர்ட்"!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சிரியாவில் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற வானிலை நிலவுவதாக ரஷ்ய தொலைக்காட்சியின் வானிலை செய்தி வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வானிலை செய்தியில், ‘சிரியாவில் தற்போது தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற வானிலை நிலவுகிறது' எனக் கூறப்பட்டது.

Russian TV Reporter Says Weather Conditions 'Ideal' For Bombing Syria

மேலும், வானிலை அறிவிப்பு செய்யும் பெண், தன் முன் திரையில் ஒளிரும் வானிலை நிலவர செயற்கைக்கோள் புகைப்படங்களை சுட்டிக்காட்டியபடி "சிரியாவில் காற்றின் வேகம் நொடிக்கு 2.4 மீட்டர் வேகத்தில் இருக்கிறது. வானம் தெளிவாக இருக்கிறது.

தற்போதுள்ள வானிலை நிலவரப்படி, ரஷ்ய விமானங்கள் மேகத்திற்கு அடியில் பறந்தபடி, கடுமையான தாக்குதலில் ஈடுபட முடியும்." எனத் தெரிவித்தார்.

பொதுவாக மழை வரும் வராது, வெயில் அடிக்கும் இல்லை என மட்டுமே வானிலை செய்திகளில் கூறப்படும். ஆனால், அவற்றில் இருந்து வேறுபட்டு தாக்குதல் நடந்த ஏற்ற சூழல் குறித்து வானிலை அறிக்கை வாசித்தது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+