For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்கூல் லீவு இல்லை: ஒபாமாவுடன் மகள்கள் இந்தியா வரவில்லை

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்கடன்: பள்ளியில் விடுமுறை இல்லாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அவரது மகள்கள் இந்தியா வரவில்லை.

டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வருகிறார். ஆனால் அவர்களின் மகள்கள் மாலியா மற்றும் சாஷா இந்தியா வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Sasha, Malia not to accompany Obama on India visit

பள்ளியில் விடுமுறை இல்லாததால் மாலியாவும், சாஷாவும் இந்தியா வரவில்லையாம். கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் தங்களின் தாயுடன் சீனா சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பென் ரோட்ஸ் கூறுகையில்,

மாலியா, சாஷாவுக்கு பள்ளி தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் பள்ளி விடுமுறையின்போது தான் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இந்தியாவில் மிஷல் தனியாக எங்கும் செல்ல திட்டமிடவில்லை என்றார்.

English summary
Malia and Sasha - the First Daughters of the United States - will give a miss to India trip as they tend only to travel with their parents when they are on vacation from school, a US official has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X