For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்.. விஸ்வரூபம் எடுத்த சவுதி- பாக் மோதல்.. ரியாத் விரைந்த ராணுவ மேஜர்

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் தற்போது சவுதி அரேபியாவிற்கு விரைந்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் தற்போது சவுதி அரேபியாவிற்கு விரைந்து இருக்கிறார்.

Recommended Video

    பாகிஸ்தான் - சவுதி பிரச்சனை.. என்ன நடக்கிறது?

    சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இஸ்லாமிய நட்பு நாடுகள் இடையே கசப்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு காரணம் காஷ்மீர்தான். காஷ்மீர் பிரச்சனையை சவுதி எழுப்ப வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் கோரிக்கை.

    அதாவது இந்தியாவிற்கு எதிராக சவுதி அரேபியா பேச வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

    இது லிஸ்ட்லேயே இல்லையே.. இந்தியாவில் TikTokஐ கொண்டு வர செம பிளான்.. அம்பானி உதவியை நாடும் பைட்டான்ஸ்இது லிஸ்ட்லேயே இல்லையே.. இந்தியாவில் TikTokஐ கொண்டு வர செம பிளான்.. அம்பானி உதவியை நாடும் பைட்டான்ஸ்

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    இதற்காக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசி மாநாட்டை கூட்ட வேண்டும் என்றும் பாகிஸ்தான் சவுதி அரேபியாவிற்கு கோரிக்கை வைத்தது. ஆனால் சவுதி அரேபியா இதை கண்டும் காணாமல் இருந்துவிட்டது. இதனால் கோவம் அடைந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சவுதி அரேபியாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

    முடியாது என்றால் சொல்லுங்கள்

    முடியாது என்றால் சொல்லுங்கள்

    காஷ்மீர் விஷயத்தை தேவையில்லாமல் சவுதி அரேபியா தள்ளிபோடுகிறது. சவுதி அரேபியாவால் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை கூட்ட முடியாது என்று கூறினால் நாங்கள் கூட்ட தயாராக இருக்கிறோம். சவுதி அரேபியாவால் முடியவில்லை என்றால் சொல்லிவிடட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    பாகிஸ்தான் மீது கோபம்

    பாகிஸ்தான் மீது கோபம்

    காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை சவுதி அரேபியா கண்டும் காணாமல் இருக்கிறது. பாகிஸ்தானால் இப்படி இருக்க முடியாது. 57 இஸ்லாமிய நாடுகள் எங்கள் பக்கம் நிற்க தயாராக இருக்கிறது. சவுதி அரேபியா தயாராக இல்லை என்றால் பிரதமர் இம்ரான் கான் மூலம் இந்த கூட்டத்தை நடத்துவோம் என்று முகமது குரேஷி குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாகிஸ்தான் மீது சவுதி அரேபியா கடும் கோபத்திற்கு உள்ளானது.

    திரும்பி வாங்கியது

    திரும்பி வாங்கியது

    இதனால் கோபம் அடைந்த சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கொடுத்த கடனை திரும்ப வாங்கியது. பாகிஸ்தானுக்கு கொடுத்த 1பில்லியன் டாலர் கடனை சவுதி அரேபியா திரும்ப வாங்கியது. அதேபோல் மேலும் 1 பில்லியன் டாலர் கடனை சவுதி அரேபியா திரும்ப கேட்டுள்ளது . அதேபோல் எண்ணெய் முதலீடு 3 பில்லியன் டாலரை கொடுக்க முடியாது என்றும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா அதிரடியாக கூறியுள்ளது.

    சீனாவிடம்

    சீனாவிடம்

    இனி நாங்கள் கடன் தர முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சீனாவிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள். சவுதியை மீறி இஸ்லாமிய கூட்டமைப்பை பாகிஸ்தான் கூட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இரண்டு நாட்டு உறவுக்கு எதிரான முடிவு இது என்று சவுதி அரேபியா கூறியுள்ளது. இதனால் தற்போது பாகிஸ்தான் கலங்கி போய் இருக்கிறது. சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் தற்போது சவுதி அரேபியாவிற்கு விரைந்து இருக்கிறார்.

    சென்றார்

    சென்றார்

    பாகிஸ்தான் ராணுவ மேஜர் காமர் ஜாவேத் பாஜ்வா தற்போது சவுதி சென்றுள்ளார். சவுதி தலைவர்களுடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எப்போதும் நெருக்கமாக இருப்பார்கள். இதனால் சவுதி நாட்டிடம் பாகிஸ்தான் மேஜர் சமாதானம் பேசுவார் என்கிறார்கள். விரைவில் பாகிஸ்தான் அரசியலில் இதனால் மாற்றம் ஏற்படும், பெரும்பாலும் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி பதவி விலக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Saudi Arabia and Pakistan on the brick of fight: Army general goes to Riyadh for peace talk.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X