For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க சவுதி அரேபிய அரசு திட்டம்?

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் கல்லறையை இடித்துவிட்டு அவரது எலும்புகளை யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இன்டிபென்டன்ட் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மதினாவில் இருக்கும் அல் மஸ்ஜித் அல் நவாபி பள்ளிவாசலில் நபிகள் நாயகத்தின் கல்லறை உள்ளது.

இந்த கல்லறையை இடித்துவிட்டு நபிகள் நாயகத்தின் எலும்புகளை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இன்டிபென்டன்ட் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணம்

ஆவணம்

நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிப்பது குறித்த 61 பக்க ஆவணம் அல் மஸ்ஜித் அல் நவாபி பள்ளிவாசல் மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

கல்லறை

கல்லறை

இஸ்லாத்தில் எந்த மனிதருடைய கல்லறையிலும் வணங்குவது ஆண்டவனுக்கு இணை வைப்பதாகும்.

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

தான் இறந்த பிறகு தன்னை புதைக்கும் இடத்தில் கல்லறை எதுவும் கட்டக் கூடாது, யாரும் அங்கு வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகமே கூறியுள்ளார்.

மதினா

மதினா

மதினாவுக்கு வரும் மக்கள் நபிகள் நாயகத்தின் கல்லறையில் பிரார்த்தனை செய்யத் துவங்கியுள்ளார்களாம். இதையடுத்து தான் இணை வைக்கும் குற்றத்தை தடுக்கவே சவுதி அரசு நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வதந்தி

வதந்தி

இது வதந்தியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை சவுதி அரசு ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UK's Independent reported that Saudi Arabia is planning to destroy the tomb of Prophet Mohamed in the Al-Masjid al-Nabawi Mosque in Medina and to transfer his body remains to an anonymous grave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X