தீவிரவாதிகளை ஒழிக்க வீரர்களை அனுப்பாவிட்டால்... எண்ணெய் வாங்க மாட்டோம்... சவுதியை மிரட்டும் டிரம்ப்
வாஷிங்டன்: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப். அடுத்த அமெரிக்க அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக டிரம்ப் கருதப்பட்டாலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டிரம்ப் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும்' என அவர் எச்சரித்துள்ளார்.
அதோடு, அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் எனவும் அதில் அவர் மிரட்டியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications