2022 ஆம் ஆண்டில் 10 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி.. சவுதி அரேபிய அரசு அறிவிப்பு
சவுதி அரேபியா: 2022 ஆம் ஆண்டுக்கான புனித பயணம் மேற்கொள்ள 10 லட்சம் பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருத்தல் வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பயணத்திற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் செய்து அதில் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020 ஆம் ஆண்டு 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு 60 ஆயிரம் பயணிகளுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.
பொதுவாக ஆண்டுதோறும் 25 லட்சம் பயணிகளாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள மெக்கா செல்வது வழக்கம். தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் பயணம் மேற்கொள்வது அவர்களின் நம்பிக்கையாகும். இந்தியாவிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications