மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சவுதி அரேபியாவின் பொது பாதுகாப்புத்துறை அபாய எச்சரிக்கை விடுத்தது. ஹவுதிகளின் ஏவுகணை அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த எச்சரிக்கையை விடுத்ததாக தெரிகிறது. எனினும், சில நிமிடங்களில் இந்த அலர்ட் திரும்ப பெறப்பட்டது. மெக்கா நகருக்கு கடந்த 10 நாட்களில் விடுக்கப்பட்ட 2-வது எச்சரிக்கையாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்த நாட்டு அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹவுதி அமைப்புக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே மோதல் நீடித்து வரும் நிலையில், சமீப நாட்களாக போர் தீவிரம் அடைந்துள்ளது. இதில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு ராணுவம் களமிறங்கியுள்ளது.

Saudi issue an alert for holy city of Mecca second time in less than 10 days

இதனால், சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ஹவுதிக்கள் நடத்தி வருவதால், சவுதி அரேபியாவில் அவ்வப்போது ஏர் சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 16 ஆம் தேதி இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரை குறிவைத்து டிரோன் தாக்குதலை ஹவுதிக்கள் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெக்காவின் தடைசெய்யப்பட்ட வான்எல்லைக்குள் நுழைய முயன்ற அந்த டிரோனை, சவுதியின் வான்பாதுகாப்புப் படை ரேடார் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. அதேநேரத்தில் மெக்கா நகரை குறிவைத்து தாக்கவில்ல என்று ஹவுதி கிளர்ச்சிக்குழு மறுப்பு தெரிவித்து இருந்தது. இவ்வாறாக கடந்த சில நாட்களாக சவுதி அரேபி​யா, ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் உள்பட செங்கடல் மாகாணமான யான்பூ, தயீஃப், ஜெட்டா மற்றும் தபுக் ஆகிய பகுதிகளுக்கு அந்த நாட்டின் பொது பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 நாட்களில் விடுக்கப்படும் இரண்டாவது எச்சரிக்கை இதுவேயாகும். இதுமட்டும் இன்றி சவுதியின் மேற்கு கடலோர பகுதிகளான யான்பு, தைஃப், ஜெட்டா மற்றும் தபுக் ஆகிய பிராந்தியங்களிலும் தனியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிறிது நேரத்தில், ஹவுதி கிளர்ச்சிக்குழுவுவுடன் மோதி வரும் சவுதி கூட்டமைப்பு, ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கூறியது. தைஃப் மற்றும் யான்பு ஆகிய நகரங்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அழித்தாக தெரிவித்துள்ளது. ஹவுதி பயங்கரவாத அத்துமீறலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் சவுதி கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெக்கா உள்ளிட்ட நகரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை சில நிமிடங்களில் திரும்ப பெறப்பட்டது. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி தாக்குதல்களுக்கு முன்னதாக இத்தகைய எச்சரிக்கைகள் சமீப காலமாக சவுதி அரேபியாவில் விடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+