சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து.. இளவரசர் உட்பட 8 பேர் உடல் சிதறி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து.. இளவரசர் உட்பட 8 பேர் பலி- வீடியோ

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹெலிக்காப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இளவரசர் மன்சூர் பின் முக்ரின் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் ஆஸிர் மாகாணத்தின் துணை மேயராக உள்ளார்.

இவர் ஏமன் எல்லைப் பகுதியில் நேற்று ஆய்வு செய்ய 7 பேர் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிக் கொண்டிருந்தது.

ரேடாரில் இருந்து மறைவு

ரேடாரில் இருந்து மறைவு

அப்போது ஹெலிகாப்டர் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் மறைந்த அபா பகுதியில் அந்நாட்டு மீட்புப்படையினர் தேடுதல்பணியில் ஈடுபட்டனர்.

இளவரசர் உட்பட 8 பேர் பலி

இளவரசர் உட்பட 8 பேர் பலி

அப்போது ரியாத்தில் இருந்து 520 மைல் தொலைவில் ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிக்காப்டரில் இருந்த இளவரசர் மன்சூர் பின் முக்ரின் மற்றும் 7 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து - அதிர்ச்சி

ஹெலிகாப்டர் விபத்து - அதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக 11 இளவரசர்கள் மற்றும் 4 அமைச்சர்கள் மீது அந்த நாட்டின் எதிர்கால அரசரும், தற்போதைய இளவரசருமான முகமது பின் சல்மான் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சூழலில் ஹெலிகாப்டர் விபத்தும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரிக்க உத்தரவு

விசாரிக்க உத்தரவு

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A helicopter carrying a high-ranking Saudi prince and other government officials crashed Sunday in the kingdom's south near the border with Yemen, reportedly killing all eight people aboard.
Please Wait while comments are loading...