For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா, ஜப்பானின் 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு - நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு விருது!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: நியூட்ரினோ ஆராய்ச்சியாளர்களான கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் ஒட்டுண்ணிகள் தொடர்பான ஆராய்ச்சியில் சாதனை படைத்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அயர்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த வில்லியம் காம்பெல், சடோஷி ஒமுரா, டாக்டர் யூயூ டு ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரம் இன்று வெளியிடப்பட்டது. கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இருவரும் நியூட்ரினோ துகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் நியூட்ரினோவுக்கும் நிறை உண்டு எனக் கண்டறிந்து சாதனை படைத்தவர்கள்.

English summary
Japan's Takaaki Kajita and Canada's Arthur McDonald have won the 2015 Nobel Prize in physics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X