For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த ஊர் சமையல் என்றாலும் நம்ம ஊர் சமையல் போல வருமா..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள 2500 விதமான உணவு வகைகளை ஆராய்ந்து அவற்றின் சுவைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

விதம் விதமான மசாலாக்களை உள்ளடக்கியது இந்திய உணவு வகைகள். இதன் நறுமணமும், சுவையும் உலகப் புகழ் பெற்றவையாகும். இந்த சுவைதான் பலரையும் கட்டிப் போடுகிறது.

விதம் விதமான மசாலாக்கள் சேர்ந்தாலும் கூட இந்திய உணவுக்கென்றே உள்ள அந்த பிரத்யேகமான சுவைதான் இங்கு முக்கியமானது. இந்த நிலையில் இந்த சுவைக்கு என்ன காரணம் என்பதை அறிய 2500 இந்திய உணவு வகைகளை ஆய்வு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.

ஆய்வின் முடிவு...

ஆய்வின் முடிவு...

விதம் விதமான உபரிப் பொருட்களின் கூட்டுக் கலவைதான் இந்த சுவைக்குக் காரணம் என்பது இந்த ஆய்வின் முடிவாகும். இவை மூலக்கூறு அளவில் ஒன்று கலப்பதால்தான் உணவில் சுவை இயல்பாகவே கூடிக் காணப்படுவதாகவும் அவர்களது ஆய்வு தெரிவிக்கிறது.

சுவையூட்டிகள்...

சுவையூட்டிகள்...

மேற்கத்திய உணவுகளில் அசிட்டால் என்ற வேதிப் பொருள் காணப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள் ஜூஸ், விஸ்கி, ஆரஞ்சு ஜூஸ், பீட்ஸ் போன்றவற்றில் இதைக் காணலாம். மேலும் 50 வகையான சுவையூட்டிகள் உணவுப் பொருட்களில் காணப்படுகின்றனவாம்.

வித்தியாசமான முடிவுகள்...

வித்தியாசமான முடிவுகள்...

இந்திய உணவு வகைகளில் இவை வித்தியாசமான வேதிக் கலவையாக உள்ளன. இதுகுறித்து ஜோத்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், வித்தியாசமான முடிவுகள் கிடைத்துள்ளன.

தனிச்சுவை...

தனிச்சுவை...

தேங்காயும், வெங்காயமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத உணவுப் பொருட்கள். ஆனால் இவை உணவில் சேரும்போது கிடைக்கும் சுவையே தனியாகும்.

கேயன் எனும் கரி பவுடர்...

கேயன் எனும் கரி பவுடர்...

பெரும்பாலான இந்திய உணவுப் பொருட்களில் கேயன் எனப்படும் கரி பவுடர் கலந்திருக்கிறது. இது சுவையைக் கூட்ட உதவுவதாகும். கறிவேப்பிலை, மிளகு, கரம் மசாலா ஆகியவற்றில் இந்த கேயன் அதிகம் உள்ளது. இந்த பொருட்கள் இல்லாத இந்திய சமையலை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மசாலாப் பொருளும்...

ஒவ்வொரு மசாலாப் பொருளும்...

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலாப் பொருளும் மற்ற பொருட்களுடன் சேரும்போது வித்தியாசமான சுவையை கொடுகப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

விதவிதமான சுவை...

விதவிதமான சுவை...

பால், வெண்ணை, ரொட்டி, அரிசி ஆகிய இந்திய உணவுப் பொருட்களில் விதம் விதமான சுவையைக் கொடுக்கும் வகையில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படி இல்லை.

7 முக்கியப் பொருட்கள்...

7 முக்கியப் பொருட்கள்...

இத்தனைக்கும் இந்தியாவில் 7 வகையான முக்கிய பொருட்களே உணவில் சேர்க்கப்படுகின்றன. உலகளவில் மொத்தம் 381 வகையான உணவுப் பொருட்களே உணவுத் தயாரிப்பில் பயன்படுகின்றன. ஆனால் இவற்றின் கூட்டு சேர்க்கைதான் உணவின் சுவைக்குக் காரணமாக அமைகிறது.

கைமணம்....

கைமணம்....

இதையெலல்லாம் விட முக்கியமானது, சமைக்கும் கரம்.. அந்தக் கரம் இன்னும் கூடுதல் சுவையைக் கூட்ட உதவுகிறது என்பதும் இங்கு முக்கியமானது.

English summary
Researchers at the Indian Institute for Technology examined how frequently overlapping flavor compounds factored into a dish’s ingredients. They reviewed thousands of recipes on TarlaDalal.com, scrutinizing the subtle molecular-level differences that distinguish the cuisine, reports the Washington Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X