For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.

படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

நேரடியாக ஒளிபரப்பு

நேரடியாக ஒளிபரப்பு

ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக மிக அருகே இன்று போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

அமெரிக்காவின் நன்றி கூறும் தினத்தில்...

அமெரிக்காவின் நன்றி கூறும் தினத்தில்...

அமெரிக்காவில் நன்றி கூறும் தினம் தொடங்கும் நாளில் ஐசான் வால் நட்சத்திர் சூரியனைத் தொடவுள்ளது. அதாவது இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணியளவில்.

டைரக்டாக பார்க்காதீர்கள்

டைரக்டாக பார்க்காதீர்கள்

ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல. அதாவது நேரடியாக பார்ப்பது நல்லதல்ல. அதிலும் சூரியனை நேராக பார்த்தால் கண் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம்.

சோஹோ விண்கலம் தரும் நேரடி ஒளிபரப்பு

சோஹோ விண்கலம் தரும் நேரடி ஒளிபரப்பு

விணணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது.

வீடியோ காட்சிகளைக் காணலாம்

வீடியோ காட்சிகளைக் காணலாம்

சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. http://sohowww.nascom.nasa.gov/home.html இங்கே போனால் அதைப் பார்க்கலாம்.

சூரியனை நோக்கி பல கேமராக்கள்

சூரியனை நோக்கி பல கேமராக்கள்

சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். இந்த சோஹா, 1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும். இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சூப்பராக பார்க்கலாம்

சூப்பராக பார்க்கலாம்

சோஹோவின் மூலமாக நாம் சூரியனையும், அதைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் தெளிவாக காண முடியுமாம். குறிப்பாக ஐசானை.

ஐசான் தப்பித்தால்

ஐசான் தப்பித்தால்

ஐசான் வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கி அதை கிராஸ் செய்யும்போது உருகி உருக்குலைந்து போகாமல் தப்பித்தால் டிசம்பர் 2வது வாரம் வரை அதை நாம் அதிகாலையில் பிரகாசத்துடன் கூடியதாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

லைவ் கூகுள் ஹேங் அவுட்

லைவ் கூகுள் ஹேங் அவுட்

அதேபோல லைவ் கூகுள் ஹேங் அவுட்டுக்கும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலமும் ஐசானின் சூரிய மோதலை நேரடியாக காணலாம். இதை SPACE.com இணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
Astronomers all over the world are training their eyes and telescopes on Comet ISON as it approaches its closest distance to the sun on Thursday (Nov. 28), with several unblinking space telescopes offering live views of the comet's solar encounter. Comet ISON's closest approach to the sun, called perihelion, will occur Thursday at 1:44 p.m. EST (1844 GMT), just in time for the Thanksgiving Day in the United States. But rather than the traditional football game, we’d suggest you watch ISON's progress around the sun instead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X