For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டினால் மரணம்.. அதிரவைக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசிகள்.. யார் இவர்கள்? ஏன் தனியே வசிக்கிறார்கள்?

அந்தமான் தீவுகளில் வசிக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசிகள் திடீர் என்று உலகம் முழுக்க பிரபலம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்தமான் தீவிற்குள் நுழைந்த நபர், கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்!- வீடியோ

    சென்டினல்: அந்தமான் தீவுகளில் வசிக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசிகள் திடீர் என்று உலகம் முழுக்க பிரபலம் அடைந்துள்ளனர்.

    அந்தமான் தீவுகளில் உள்ள சென்டினல் தீவுகளில் இந்த ஆதிவாசி மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவிற்கு சென்ற ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் நேற்று கொலை செய்யப்பட்டார்.

    ஜான் ஆலன், சென்டினேலீஸ் ஆதிவாசிகள் மூலம் கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்டினேலீஸ் ஆதிவாசிகளை சுற்றி நிறைய மர்மமான கதைகளும், வரலாறும் சுற்றி வருகிறது.

    எப்படி நினைக்கிறார்கள்

    எப்படி நினைக்கிறார்கள்

    சென்டினேலீஸ் மக்கள் உலகம் தோன்றியதில் இருந்தே அங்குதான் வாழ்கிறார்கள். அந்த நிலப்பகுதியின் பெயரும் (சென்டினல்) அவர்களுக்கு சென்டினேலீஸ் என்ற பெயரும் கூட நாம் வைத்ததுதான். அவர்கள் தங்களை 12 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய கற்கால மனிதர்களுக்கும் முந்தைய தலைமுறையாக கருதுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    நிலப்பகுதி

    நிலப்பகுதி

    அந்த நிலப்பகுதியின் மொத்த பரப்பளவே 60 சதுர கிலோ மீட்டர்தான். 1947ல் இந்த பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. ஆனாலும் சென்டினேலீஸ் மக்கள் மீது எந்த விதமான சட்டங்களும், விதிமுறைகளும் புகுத்தப்படாது என்றும் சட்டம் விதிக்கப்பட்டது. அவர்கள் தனியாக பாதுகாக்கப்பட இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அங்கு 50ல் இருந்து 150 வரை சென்டினேலீஸ் மக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் மொழி இருக்கிறது. ஆனால் அது இந்தியர்களோ, உலகில் வேறு யாருமோ பேசும் மொழி கிடையாது. அவர்கள் வேட்டையாடி உணவு உண்டு வருகிறார்கள்.

    இந்திய அரசு

    இந்திய அரசு

    இந்திய அரசு சென்டினேலீஸ் மக்களின் தனித்தன்மையை மதித்து வருகிறது. அந்த சென்டினல் தீவிற்கு 3 கிமீ அருகே வரை மட்டும் செல்ல அனுமதி இருக்கிறது. அதற்கு மேலே சென்றால் இந்திய கடற்படையால் கைது செய்யப்படுவோம். அதேபோல் அந்த பகுதிக்கு மேல் ஹெலிகாப்டரில் செல்வதும், புகைப்படம் எடுப்பதும் சில மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது.

    சுனாமி எப்படி

    சுனாமி எப்படி

    அங்கு 2004ல் சுனாமி தாக்கி இருக்கிறது. ஆனால் இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. அவர்களில் எத்தனை பேர் இந்த சுனாமியால் பலியானார்கள் என்று விவரங்கள் வெளியாகவில்லை.

    நோய் இல்லை

    நோய் இல்லை

    அதேபோல் அவர்கள் அதிக எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நம்மை போன்ற மனிதர்கள் அங்கே செல்வது பெரிய சமநிலை சீர்கேட்டை உருவாக்கும், புதிய நோய்களை அவர்களுக்கு உருவாக்கும் என்று கூறுகிறார்கள். இதனால்தான் நம்மை அங்கே அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கதை முடிந்தது

    கதை முடிந்தது

    தங்களை வேறுவிதமான மனிதர்கள் என்று நினைப்பதால்தான் அவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த தீவிற்குள் சென்றால் கண்டிப்பாக கொலை செய்துதான் அனுப்புவார்கள். அந்த பகுதிகளுக்கு மேல் பறந்த ஹெலிகாப்டர்களையே இவர்கள் அம்பு எய்தி தாக்கி இருக்கிறார்கள். அதேபோல் இந்திய விமானப்படை மீது அம்பு எய்தி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    English summary
    Sentinelese people avoid contact with the outside world with their own way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X