'ஏசி முதல் வகுப்பு பெட்டியில் செக்ஸ் சர்வீஸ் இருக்கு'.. ரயில் டிக்கெட்டை பார்த்து ஷாக் ஆன பயணிகள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ரயில்வே டிக்கெட்டில் 'ஏசி முதல் வகுப்பில் செக்ஸ் சர்வீஸ் இருக்கு' என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தற்போது இந்த வாசகம் அடங்கிய டிக்கெட் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரயில் நிலையங்களில் வெளியாகும் அறிவிப்புகளில் சில நேரங்களில் அநாகரிமான வார்த்தைகள் ஒலிபரப்பானதாக வெளிநாடுகளில் அடிக்கடி செய்திகள் வெளியாவதை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம்.
ஏன்... ரயில் நிலையங்களில் ஓடும் அறிவிப்பு திரைகளில் ஆபாச படங்கள் கூட ஓடியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

திரையில் ஆபாச படம்
கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி மெட்ரொ ரயில் நிலையத்தில் உள்ள திரையில் இப்படித்தான் ஆபாச படம் ஓடியது அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இத்தகைய சம்பவங்களுக்கு பெரும்பாலும் ஹேக்கர்கள் கைவரிசைதான் காரணமாக அமைகிறது. ஒரு சில நேரங்களில் கவனக்குறைவு போன்றவை காரணமாக அமைந்தாலும் ஹேக்கர்கள் மென்பொருளில் ஊடுருவி இப்படி சித்து வேலைகளில் ஈடுபடுவதே இப்படி நடக்கும் சம்பவங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

முதல் வகுப்பு பெட்டியில் செக்ஸ் சர்வீஸ்
இந்த நிலையில், பாகிஸ்தானில் வழங்கப்பட்ட ரயில் டிக்கெட்டில் ''ஏசி முதல் வகுப்பில் செக்ஸ் சர்வீஸ் வழங்கப்படுகிறது'' என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்துள்ளது. பயணிகள் அனைவரும் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு பர்ஸ்களில் வைத்தார்களே தவிர இந்த வாசகத்தை பெரும்பாலானோர் பார்க்கவில்லை. ஒரு பயணி தற்செயலாக டிக்கெட்டை பார்த்த போது இந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதிர்ச்சியில் பயணிகள்
தொடர்ந்து இந்த டிக்கெட் இணையத்தில் பரவ தொடங்கியது. சமூக வலைத்தளங்களிலும் இந்த வாசகங்கள் அச்சிடப்பட்ட டிக்கெட்கள் வேகமாக பரவின. இதனால் இணைய வாசிகளும் அதிர்ச்சியடைந்தனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி காட் அடு நகரில் இருந்து வஹொன் நகரத்திற்கு பயணி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் மேற்கூறிய வாசகம் அச்சிடப்பட்டதை பார்த்துள்ளார்.

காட்டுத்தீ போல் பரவியது
இதில் ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த அவர் உடனடியாக ரயில்வே டிக்கெட் கவுண்டர் சென்று டிக்கெட்டை காண்பித்து தகவல் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டிக்கெட் வழங்கும் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு இருபப்தாக தெரிவித்தனர். இது தொடர்பாக அந்நாட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
இதையடுத்து, இந்த செய்தி உள்ளூர் ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் டிக்கெட்டில் இப்படி வாசகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாகவும், ஹேக்கிங் செய்ய முடியாத படி தொழில்நுட்ப வகையில் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications