For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு ரோலக்ஸ் வாட்சை வாங்க துபாய் அரச குடும்பத்திற்கே இத்தனை போராட்டமா.. அப்படி என்னதான் இருக்கு?

Google Oneindia Tamil News

ஷார்ஷா: ரோலக்ஸ் கடிகாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைகிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ரோலக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாட்சுகள் உலகத்திலேயே காஸ்ட்லியானவை. இது துருப்பிடிக்காத ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆனது. இது கடினமான பொருளாகும். எளிதில் அழியாதது.

இது போன்ற ஒரு தரமான பொருளை எந்த வாட்சிலும் காண முடியாது. இந்த வாட்சை ஒரு முறை வாங்கிவிட்டு அதை 100 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அதே போல் புதிதாகவே இருக்கும். இந்த வாட்ச்சில் தங்கமும் வைரக் கற்களும் இருக்கும். இந்த ஸ்டீல் 904 எல் என அழைக்கப்படுகிறது.

ப்பா.. இவ்வளவு லட்சமா! சூர்யாவிற்கு கமல் தந்த ரோலக்ஸ் வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? ஆடி போயிடுவீங்க ப்பா.. இவ்வளவு லட்சமா! சூர்யாவிற்கு கமல் தந்த ரோலக்ஸ் வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? ஆடி போயிடுவீங்க

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுவிஸ் கைக்கடிகாரங்களின் சில்லறை விற்பனையாளரின் உரிமையாளரான செட்டிகி ஹோல்டிங் கூறுகையில் அரச குடும்பத்தார் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை விரும்பினால் அதை அவர்கள் பெறுவார்கள். இதே அவர்கள் கடிகாரங்களை பரிசாக கொடுக்க விரும்பினால் அது கிடைக்காது.

ரோலக்ஸ் கடிகாரம்

ரோலக்ஸ் கடிகாரம்

ரோலக்ஸ் கடிகாரங்களை சிலர் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை சரியான நபர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். துபாய் எமிரேட்டில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட ரோலக்ஸ் டீலர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சுவிஸ் வாட்ச்

சுவிஸ் வாட்ச்

சுவிஸ் வாட்ச் தொழில்துறையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவை அதிகரித்து வருவதோடு ஏற்றுமதியின் மதிப்பின் அடிப்படையில் அதன் சிறந்த ஆண்டை எட்டியுள்ளது. அக்டோபர் மாதம் வரை சுவிஸ் வாட்ச் தொழில் துறை கூட்டமைப்பின்படி துறையின் 30 பெரிய சந்தைகளில் சுவிஸ் வாட்ச் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தை விட 13.3 சதவீதமாக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வளர்ச்சி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வளர்ச்சி

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சி அதை விட சற்று அதிகமாக 13.8 சதவீதமாக உள்ளது. ஒரு கிளையண்டை அழைத்து வாட்ச் இருக்கிறது என்றால் அவர்கள் என்ன மாடல் கேட்பதில்லை, நமக்கு எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்கிறார்கள். 1960 இல் தனது முதல் கடையைத் திறந்த சித்திக் அன்ட் சன்ஸ் இப்போது நாட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகிறது.

ஸ்டோர்ஸ்

ஸ்டோர்ஸ்

உலகின் மிகப் பெரிய ரோலக்ஸ் ஸ்டோர் கடைகளில் ஒன்று துபாய் மாலில் உள்ளது. கொரோனா காலத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிட்டது. இதனால் தற்போது ஆர்டர் செய்தவர்களுக்கு பொருட்களை விரைந்து அனுப்பி வருகிறோம். ரோலக்ஸ் வாட்ச் குறித்து தெரியாதவர்கள் கூட மற்றவர்கள் வாங்குகிறார்களே என்பதற்காக அந்த வாட்சை வாங்குகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த வாட்சிற்கு துபாயில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

English summary
Sheikh wants a rolex watch then need to struggle to get it and have to bumped to the top 4000 waiting list n the UAE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X