For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரக்குலையே நடுநடுங்கி போச்சு.. சிங்க குட்டியை திருட, கிட்ட கிட்ட நெருங்கிய நபர்.. அப்பறம் பார்த்தால்?

சிங்கக்குட்டிகளை திருட வந்த நபரை கடித்து குதறி கொன்றுள்ளது சிங்கம்

Google Oneindia Tamil News

கானா: சிங்கக் குட்டியை திருட முயன்றுள்ளார் ஒரு இளைஞர்.. இதை பார்த்த தாய்சிங்கம், அந்த நபரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆப்பிரிக்க நாடான கானாவில் அக்ரா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.. இந்தப் பூங்காவில் சிங்கம் உட்பட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.

இங்குள்ள சிங்கம் ஒன்று, கடந்த வருடம் இறுதியில் 2 வெள்ளை சிங்கக்குட்டிகளை ஈன்றது... அந்த பூங்காவுக்கு வரும் அனைவருமே அந்த வெள்ளை குட்டிகளை ஆர்வத்துடன் பார்த்து செல்வார்கள்..

சிங்கங்கள் உலவும் காடு... காட்சிப்பொருளான சிங்க ராஜாவுக்காக பேசும் டாக்டர் ராமதாஸ் சிங்கங்கள் உலவும் காடு... காட்சிப்பொருளான சிங்க ராஜாவுக்காக பேசும் டாக்டர் ராமதாஸ்

 வெள்ளைக்குட்டி

வெள்ளைக்குட்டி

இந்நிலையில் அந்த 2 வெள்ளை குட்டிகளையும் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.. பட்டப்பகலில், திருடினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்துள்ளார்.. அதனால், குட்டிகளின் அருகில் வந்துள்ளார்.. குட்டிகளை ஒருவர் திருட வருவதைக் கண்ட சிங்கம், அவரை ஆவேசத்துடன் தாக்கியது.. சிங்கம் கடித்து குதறியதில், நிலைகுலைந்து அந்த நபர் அங்கேயே சுருண்டு உயிரிழந்தார்... இதையடுத்து, அவரின் உடல், மீட்கப்பட்டு, மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 சிங்கங்கள்

சிங்கங்கள்

கானாவின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கான துணை அமைச்சர் பெனிட்டோ ஓவுசு பயோ இச்சம்பவம் குறித்து சொல்லும்போது, "உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு குட்டிகள் இருக்கின்றன.. அதனால், யாராவது பக்கத்தில் வந்தாலே, தங்கள் குழந்தைகளை அவர்கள் எடுத்து செல்ல முயற்சிப்பதாக அவைகள் உணரக்கூடும்.. அதனால்தான், இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

 பசி - சிங்கம்

பசி - சிங்கம்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.. அப்படி இருந்தும், பாதுகாப்புப் பகுதியை தாண்டிய, அந்த நபர் வெள்ளை சிங்கக் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்... இதனை கவனித்த தாய் சிங்கம் அந்த நபரை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்திருக்கிறார்" என்றார்.. ஆனாலம், பசியின் காரணமாகவே, சிங்கம் அந்த நபரைக் கொன்றதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி

கானாவில் உள்ள இந்த அக்ரா உயிரியல் பூங்காவானது, முதன்முதலில் 1960 களின் முற்பகுதியில் கானாவின் முதல் ஜனாதிபதியான குவாமே நக்ருமாவால் ஒரு தனியார் பூங்காவாக நிறுவப்பட்டது... ஆனால், 1966ல் அந்த ஜனாதிபதி தூக்கியெறியப்பட்ட பிறகு, அக்ரா உயிரியல் பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இப்படி விலங்குகளால் தாக்கி யாருமே இந்த பூங்காவில் உயிரிழந்ததில்லை. இப்போதுதான் சிங்கம் ஒரு மனிதரை கடித்து குதறி கொன்றுள்ளது என்பதால், அங்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

English summary
Shocking Incident in Ghana and Young man who allegedly tried to steal cub killed by lion in GhanaShocking Incident in Ghana and Young man who allegedly tried to steal cub killed by lion in Ghana சிங்கக்குட்டிகளை திருட வந்த நபரை கடித்து குதறி கொன்றுள்ளது சிங்கம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X