12 வயதில் 139 சென்டிமீட்டர் நீள கூந்தல்... எண்ணை, தண்ணி செலவுக்கே சொத்து காலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நோவோசிபர்ஸிக்: கதைகளில் வரும் பொன் கூந்தல் அழகி ராபுன்சல் போல தெற்கு ரஷ்யாவின் சைபீரியாவைச் சேர்ந்த 12 வயது பெண் நீளமான கூந்தலை வளர்த்து வருகிறார்.

பெண்களுக்கு தலைமுடி மேல் எப்போதுமே ஒரு அலாதி ஆசை உண்டு. நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அதே போன்று அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை.
தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவதோடு மட்டுமல்லாது, மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறியாகவும் திகழ்கிறது.

 சவால்

சவால்

ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே நீண்டு வளர்வதில்லை கவலையும் இருக்கத்தான் செய்கிறது. தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என நாம் பயன்படுத்தும் எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்ப்பும் சவாலான விஷயம் தான்.

 பெண்களின் முடி ஆசை

பெண்களின் முடி ஆசை

முடி ஆசை என்பது இந்திய நாட்டு பெண்களுக்கு மட்டும் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அயல்நாட்டவர்க்கும் அந்த ஆசை உள்ளது என்பதை நிரூபித்துள்ளார் இந்த சைபீரிய ராபுன்சல்.

 சைபீரிய சிறுமி

சைபீரிய சிறுமி

தெற்கு ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபர்க்ஸை சேர்ந்த 12 வயது சிறுமி நீனா பிச்கோவா தான் அவர். இந்தச் சிறுமி எப்போதுமே முடி வெடிக்கொள்ளவே மாட்டாராம்.

 கின்னஸ் சாதனைக்காக

கின்னஸ் சாதனைக்காக

ஏற்கனவே ரஷ்ய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் நீனா. தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவில் நீண்ட கூந்தலை கொண்டவர் என்ற இடம்பிடிப்பதற்காக கூந்தலை வளர்த்து வருகிறார். அவருடைய கூந்தல் 139 சென்டிமீட்டர் நீளம் உள்ளது.

கியூட் வீடியோ

துள்ளி குதித்து வரும் இந்த குட்டி தேவதையோடு அவருடைய பொன் கூந்தலும் ஒய்யார ஊஞ்சலாடுகிறது. சிறுமியின் முழு நீளக் கூந்தலை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nina Bychkova, a 12-year-old girl from Novosibirsk growing lengthy hair to take place in the world Ginness book records
Please Wait while comments are loading...