தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது : காணொளி வெளியிட்ட பிரபல பாடகி

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
சின்னியட் ஒ'கானர்
BBC
சின்னியட் ஒ'கானர்

பல விருதுகளைப் பெற்ற பிரபல ஐரிஷ் பாடகி சின்னியட் ஒ'கானர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ஒரு காணொளியில், தனக்கு ''தற்கொலை'' செய்துகொள்ள வேண்டும் என தோன்றுவதாக கூறியுள்ளார்.

மன நோய் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவும் முயற்சியாக இந்த காணொளியை பதிவேற்றம் செய்வதாக கூறும் ஒ'கானர், 12 நிமிட நீளமுள்ள இந்தக் காணொளி முழுவதிலும் அழுதுகொண்டே இருக்கிறார்.

நான் தற்போது நியூ ஜெர்சியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை விடுதியில் தங்கியிருக்கிறேன். எனக்கு எல்லாமே நான் தான் என அவர் கூறியுள்ளார்.

மன நோய் போதை மருந்துகளைப் போன்றது. நீங்கள் யாராக இருந்தாலும் அதற்குக் கவலையில்லை. அதிலும் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குக் களங்கம் ஏற்படும் எனவும் அவர் கூறுகிறார்.

எனது மன நல மருத்துவரைத் தவிர எனக்கென்று யாரும் இல்லை. எனது மருத்துவர் இந்த உலகத்திலே சிறந்த நபர். நான் அவரது ஹீரோ என கூறுவார். அந்த நேரத்தில் என்னை உயிருடன் வைத்திருக்கும் ஒரே விஷயம் இதுதான் என்கிறார் ஒ'கானர்.

பாதிக்கப்படக்கூடிய மக்கள்

மன நோய் எப்படி இருக்கும் என அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இந்தக் காணொளியை எடுத்துள்ளேன் என்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாகத் தன்னை தன் குடும்பத்தினர் நன்றாகப் பார்த்துக்கொள்ளவில்லை என சின்னியட் ஒ'கானர் கூறியிருக்கிறார்.

மன நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் மக்களில் நானும் ஒருத்தி. எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாது. நீங்கள்தான் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

வாழ்விற்கும், சாவிற்கும் இடையே எனது முழு வாழ்க்கையும் சுழன்றுகொண்டிருக்கிறது. நான் சாகப்போவதில்லை. ஆனாலும், எங்களைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு சின்னியட் ஒ'கானருக்கு நிலை மாற்றக் குறைபாடு இருப்பது கண்றியப்பட்டது. ஆனால், உண்மையில்தான் மன அழுத்தத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிபிசியின் பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Sinead O'Connor has said she feels "suicidal" in a video uploaded to her Facebook account.
Please Wait while comments are loading...