For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் உலாவும் 6 வகை கொலையாளிகள்: உஷார் மக்களே உஷார்

By Siva
Google Oneindia Tamil News

சிட்னி: கொலை செய்ய ஆட்களை கவர 6 வகையான கொலைகாரர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்று யாராவது கூறினால் அவரை வேற்று கிரகவாசி போன்று பார்க்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கை கொலையாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது குறித்து ஹோவர்ட் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

48 கொலைகள்

48 கொலைகள்

கடந்த 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஃபேஸ்புக்கை பயன்படுத்தி உலக அளவில் 48 கொலைகள் நடந்துள்ளது.

6 வகை

6 வகை

ஃபேஸ்புக்கை பயன்படுத்தி கொலை செய்பவர்களை ஆய்வாளர்கள் 6 வகையாக பிரித்துள்ளனர்.

கருத்து

கருத்து

ஃபேஸ்புக்கில் போட்டிருக்கும் கருத்தை பார்த்து அதை தெரிவித்தவரை நேரில் சந்தித்து தாக்கி கொலை செய்பவர் ஒரு வகை. ஃபேஸ்புக்கை பயன்படுத்தி தான் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது அல்லது கொலை செய்ததை தெரிவிப்பவர் மற்றொரு வகை.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஃபேஸ்புக்கை பயன்படுத்தி தான் கொலை செய்ய திட்டமிட்டுள்ளவரை கண்காணிப்பது, கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் கொலையாளிகள் ஒரு வகை. பேன்டஸியில் வாழ்பவர்கள் தங்கள் பேன்டஸிக்காக ஃபேஸ்புக்கை பயன்படுத்தி யாரையாவது கொலை செய்வது ஒரு வகை.

போலி கணக்கு

போலி கணக்கு

ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி, யாருடனாவது பழகி அவரை நேரில் சந்தித்து கொலை செய்வது ஒரு வகை. ஃபேஸ்புக்கில் வேறு யார் பெயரிலாவது போஸ்ட் போடுவது அல்லது யாரை கொலை செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் பெயரில் கூட போஸ்ட் போடுவது மற்றொரு வகை.

English summary
Researchers have identified six different types of killers, who turn to Facebook to lure their victim or otherwise use the social networking site in their crimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X