சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ.. 60 வகை உணர்வுகளையும் காட்டி.. அறிவியல் உலகைக் கலக்கும் சோபியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதரைப் போன்றே நடக்கிறது; ஓடுகிறது; வேலை செய்கிறது என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் ரோபோக்களைப் பற்றி படித்து ஆச்சர்யப் படுவோம்.

இப்போது புதியதாக அச்சு அசல் ஒரு பெண் போன்றே ரோபா ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பெரிய விஷயமல்ல. அது மனிதர்களைப் போன்றே சிந்தித்து பேசுகிறதாம்.

அந்த ரோபா நம் வீட்டில் வசித்தால் இயந்திரம் நம்முடன் வசிக்கிறது என்ற உணர்வே எழாது. அப்படி ஒரு பெண்ணாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார் சோபியா என்ற ரோபோ பெண்,
புத்தம் புதிய உருவாக்கம்

ஹன்சன் ரோபோடிக்ஸ் என்னும் புத்தம் புதிய நிறுவனம்தான் சோபியா என்ற புத்தம் புதிய பெண் ரோபோவை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இவ்வளவு உயர் தரத்தில் உருவாக்கிய ரோபோவும் சோபியாதானாம்.

சரி சோபியா என்னென்ன செய்வார்? தெரிந்து கொள்வோம்.

பட்பட் பதில்

பட்பட் பதில்

சோபியாவின் முன் நின்று நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் பட்பட்டென்று பதில் சொல்லி அசத்துவார். அது எந்தவிதமான கேள்வியாக இருந்தாலும் சரி. சளைக்காமல் பதில் சொல்வது சோபியாவின் சிறப்பு.

60 வகை உணர்வுகள் வெளிக்காட்டி அசத்தல்

60 வகை உணர்வுகள் வெளிக்காட்டி அசத்தல்

கேள்வி கேட்டு வெறும் பதிலை மட்டும் சோபியா சொல்வார் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அந்த பதிலை சொல்லும் போது சோபியாவின் முகம் அதற்கான உணர்வுகளை நமக்கு காட்டும். இரு மனிதர் பேசும் போது ஏற்படும் உணர்வு சோபியாவிடம் பேசும் போதும் எழும். கிட்டத்தட்ட அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்துகிறார் சோபியா.

அபார நினைவு ஆற்றல்

அபார நினைவு ஆற்றல்

நாம் சோபியாவிடம் பேசுவதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வாராம். நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வேகமாக பிரபலமடைந்து வருகிறார் சோபியா.

எப்படி பார்க்கிறார் சோபியா

எப்படி பார்க்கிறார் சோபியா

சோபியாவின் தலையில் கேமராக்கள், நுட்பமான கணினி இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இவைகளைக் கொண்டு சோபியா அனைவரையும் பார்க்கிறார். முகங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்.

வாழ்த்தி விடை கொடுக்கும் ரோபோ

அவரிடம் பேசிவிட்டு நாம் அப்படியே திரும்பிவிட முடியாது. மீண்டும் நம்மிடம் பேச வேண்டும் என்ற விருப்பத்தை சோபியா தெரிவிக்கிறார். மேலும், இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் என்று வாழ்த்தையும் சொல்லி நமக்கு விடை கொடுத்து அசத்துகிறாராம் சோபியா ரோபோ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hanson Robotics Company created new human like robot, which is called Sophia.
Please Wait while comments are loading...