"கடவுள நேர்ல பார்க்கணுமா.. நான் காட்டுறேன்".. வடிவேலு பாணியில் அலறவிடும் மதப்போதகர் போஸ்டர்
ப்ரெட்டோரியா: கடவுளை நேரில் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரை காட்டப் போகிறேன் என மதப் போதகர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தென்னாப்பிரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு திரைப்படக் காட்சியில் வடிவேலு, கடவுளை காட்டுகிறேன் எனக் கூறி கிராம மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணமும் வசூலித்து கடைசியில் வேற வெலவில் அவர்களை ஏமாற்றுவார். இந்த போஸ்டரை பார்த்ததும், நம்மூர் காரர்களுக்கு அந்த நகைச்சுவைதான் நினைவுக்கு வரும்.
ஆனால், பாவம்.. தென் ஆப்பிரிக்கா மக்களோ இதை உண்மை என்று நம்பி தங்கள் வீடு, நகைகளை எல்லாம் விற்று லட்சக்கணக்கில் அந்த மதப் போதகருக்கு கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடவுள் பெயரில் அரங்கேறும் மோசடி
கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பேர்வழிகள், எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலுமே இருக்கவே செய்கிறார்கள். இந்தியாவில் கூட மதப்போதகர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர், இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் ஏராளமான உள்ளன. பிறவியிலேயே வாய் பேசு முடியாதவர்கள், கண் தெரியாதவர்களை ஒரே நிமிடத்தில் குணமாக்கும் அதிசய வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம். இதுபோன்ற ஒரு சம்பவம்தான் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது.

பிரபல பாஸ்டர்
தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மதப்போதகராக இருப்பவர் புடேலி. பல ஜெபக்கூட்டங்களை நடத்துவதும், அங்கு வரும் மக்களின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்துவதிலும் புடேலி கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. எனவே இவரது ஜெபக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அவர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்து வரும் புதேலி, ஒருசில ஆண்டுகளிலேயே பல அடுக்கு தனி பங்களா, ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு கார் என வாங்கி 'செட்டில்' ஆகிவிட்டார்.

"கடவுளை காண அரிய வாய்ப்பு"
இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸுக்கு வழக்கம் போல ஜெபக்கூட்டம் போடுவதை காட்டிலும், வேறு ஏதாவது புதிதாக செய்யலாம் என யோசித்திருக்கிறார் பாஸ்டர் புதேலி. அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளில் பாஸ்டர் புதேலியின் படங்களுடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், "கடவுளை பார்க்க ஆசைப்படுபவர்களா நீங்கள்.. உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் அனைவருக்கும் நான் கடவுளை காட்ட போகிறேன்" என எழுதப்பட்டுள்ளது.

நாளைதான் கிறிஸ்துமஸ்..
மேலும், கடவுளை நேரில் பார்க்க வேண்டும் என விரும்புவோர் ரூ.17 லட்சத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டரின் இந்த பேச்சை நம்பி, பலரும் தனது நகை, நிலங்களை விற்று அவர் கூறிய கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். நாளைதான் கிறிஸ்துமஸ். எப்படியும் பாஸ்டர் கடைசி வரை கடவுளை காட்டப் போவதில்லை. வீட்டை விற்று பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய போகிறார்களோ? நாளை மறுதினம் தெரியவரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications