For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளிக்குப் புறப்பட்ட அமெரிக்க ராக்கெட் சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது- நாசா ஷாக்!

Google Oneindia Tamil News

ப்ளோரிடா: அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, புறப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கேப் கெனாவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் செலுத்தப் பட்டது. இது அந்நிறுவனத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

{ventuno}

அந்த ஆளில்லாத ராக்கெட்டில் 1800 கிலோ பொருட்களும் கருவிகளும் இருந்தன. நேற்று மதியம் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கவுண் டவுண் முடிந்ததும் விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட், எதிர்பாராத விதமாக புறப்பட்ட 2.19 நொடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது.

அந்த ராக்கெட்டின் முதல் பகுதி பிரிவதற்கு முன்பாகவே அது வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ராக்கெட்டுடனான வீடியோ தொடர்பு முழுவதுமாக செயலிழந்துவிட்டது' என்றார்.

இந்த சம்பவத்தால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விபத்துக் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

பால்கன் ராக்கெட்டானது தனியார் நிறுவன ராக்கெட்டாகும். முதல் முறையாக இப்போதுதான் தனியார் ராக்கெட் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செலுத்தப்பட்டது. ஆனால் முதல் முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த ஓராண்டில் விண்வெளிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் போது விபத்தில் சிக்கும் மூன்றாவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An unmanned Space Exploration Technologies rocket exploded about two minutes after liftoff from Cape Canaveral Air Force Station in Florida on Sunday, destroying a cargo ship bound for the International Space Station, NASA said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X