For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்வை மாற்றுதிறனாளிகள்.. இனி ஈஸியா சாலையை கடக்கலாம்! ஸ்பெயின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த 'ரோபா நாய்'

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி பயிற்சி பெற்ற நாய்களை விட இந்த ரோபோ நாய் மலிவானது.

Google Oneindia Tamil News

மேட்ரிட்: பார்வை திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள 'ரோபோ நாய்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நாய் சாலையில் உள்ள சிக்னலை புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாகும்.

உலகம் முழுவதும் சுமார் 20 கோடி பேர் பார்வை திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வு மையம் கூறுகிறது. இந்நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் அதாவது மொத்த பிரசவத்தில் 3%க்கும் குறைவான குழந்தைகள் முற்றிலும் பார்வை திறன் இழந்து பிறக்கின்றனர். இவர்களுக்கு பார்வை திறனை கொண்டு வருவது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஸ்பானிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (CSIC) செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட ரோபோ நாயை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்கள் பார்வை திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் என்று ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்த ரோபோவில் கூகுள் மேப் இருக்கும். நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு இதனை பயன்படுத்தி போகலாம். செல்லும் வழியில் வரும் வாகனங்கள், மனிதர்களை இந்த ரோபோ நாய் தனித்தனியாக அடையாளம் காண்கிறது.

எதை பற்றியாவது புகார் கூற நினைத்தேன்.. ஆனால் எல்லாம் பிரம்மாதம்! முரசொலியில் ஸ்பெயின் செஸ் வீரர்! எதை பற்றியாவது புகார் கூற நினைத்தேன்.. ஆனால் எல்லாம் பிரம்மாதம்! முரசொலியில் ஸ்பெயின் செஸ் வீரர்!

என்னென்ன செய்யும்

என்னென்ன செய்யும்

இதில் உள்ள கேமிராக்கள் சாலைகளில் உள்ள சிக்னல்களை சரியாக புரிந்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழிக்காட்டும். அதேபோல, இது QR கோடுகளையும் ஸ்கேன் செய்து புரிந்துக்கொள்ளும். இதை புரிந்துகொண்டதோடு நின்றுவிடாமல் தன்னுடன் வரும் மாற்றுத்திறனாளியுடன் உரையாடி அவர்களுக்கு இந்த தகவல்களை தெரியப்படுத்தும். இதுமட்டுமின்றி, தன்னுடைய மாற்றுத்திறனாளி உரிமையாளருக்கான மருத்துவ சந்திப்பு நேரம், டாக்ஸிக்கு அழைப்பு விடுத்துல் ஆகியவற்றையும் இது செய்யும் திறன் கொண்டதாகும். இந்த ரோபோவை செல்போனுடன் இணைத்துவிட்டால் செல்போன் மூலமாகவே இதற்கு கட்டளை கொடுத்துவிடலாம்.

மாற்று

மாற்று

இந்த ரோபோவுக்கு டெஃபி என்று பெயரிடப்பட்டுள்ளது இதனை ஜெரார்டோ போர்ட்டிலா என்பவர்தான் உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பல பார்வை திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழிக்காட்டியாக நாய்களை பயன்படுகிறார்கள். ஆனால் இப்படி பயன்படுத்தும் நாய்களுக்கு போதுமான அளவு பயிற்சி அவசியமாகிறது. இந்த நாய்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் அதன் உரிமையாளருடன் இயல்பாக பழகும் குணத்தை கொண்டிருக்க வேண்டும். இதற்கு மாற்றாகதான் ரோபோ நாய்களை நாங்கள் உருவாக்க முயன்றோம். இது ஒன்றும் புதுமையான விஷயம் கிடையது.

குரல் அடையாளம்

குரல் அடையாளம்

ஏற்கெனவே அமெரிக்க அரசு தனது எல்லைகளை பராமரிக்க இதனை பயன்படுத்தி வருகிறது. மறுபுறம் நாசா இதனை விண்வெளிக்கு அனுப்பவும் திட்டமிட்டு வருகிறது. எனவே இதனை ஏன் மாற்றுத்திறனாளிகளுக்காக பயன்படுத்தக்கூடாது? என்கறு கேள்வியெழுந்தது. இதனையடுத்துதான் நாங்கள் இந்த ரோபோவை உருவாக்கினோம். இந்த ரோபோக்கள் மனிதர்கள், பொருட்கள், வாகனங்கள், இதர விலங்குகள், வீடு, கதவு என எல்லாவற்றையும் பிரித்து பார்த்து அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். அதேபோல உரிமையாளரின் கட்டளைகளை சரியாக புரிந்துக்கொள்ள உரிமையாளர்களின் குரலை சரியாக அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மலிவான விலை

மலிவான விலை


இந்த ரோபோ கூகுள் மேப்பை முதன்மையாக கொண்டு இயங்குவதால் மருத்துவமனைகள் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை அனைத்தையும் சரியாக அடையாளம் காணும். அதேபோல கரடு முரடான பாதையிலும் இது சரியாக செல்லும். எனவே இதனை பயன்படுத்துபவர்கள் அச்சப்பட தேவையில்லை. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற நாய்களை விட இது விலை மலிவானதுதான்" என்று கூறியுள்ளார்

English summary
A 'robot dog' developed by Spanish researchers for the visually impaired has attracted everyone's attention. This dog is good at understanding road signals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X