For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணின் காதுக்குள் குடியேறிய சிலந்தி... ஆபரேசன் மூலம் நீக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதில் இருந்து சிலந்தி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா பிரைஸ். அந்நாட்டு காவல்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காதில் பயங்கர வலி ஏற்பட்டது.

Spider found living in Welsh woman's ear

இவர் கடந்த வாரம் அங்குள்ள பீச்சில் நீச்சலில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் வீட்டிலும் குளியல் போட்டுள்ளார். அப்போது அவரது காதில் பயங்கரமாக வலி எடுத்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் கதறியுள்ளார்.

இந்த வலியுடன் மறுநாள் அலுவலகத்திற்கு சென்று, கணவன் மற்றும் குழந்தையுடன் ஓட்டலுக்கு சென்றனர். வீடு திரும்பிய பின்னர், அவரது கணவர் அவரது காதில் என்ன என்று பார்த்துள்ளார். அப்போது, எதோ ஒன்று அவரது காதுக்குள் நகர்வது தெரிவந்துள்ளது.

இதயடுத்து மருத்துவமனைக்குச் சென்ற பிரைஸின் காதுகளைப் பரிசோதித்தபோது, அவரது காதில் சிலந்தி ஒன்று வலை பின்னி வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதயடுத்து, அந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர்.

ஆடையை கழற்றி வைத்து விட்டு மீண்டும் போடும்போது ஆடையில் இருந்த சிலந்தி எனது காதுக்குள் சென்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் இளம்பெண்ணின் காதுக்குள் இருந்து உயிருடன் சிலந்தி பூச்சியை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதுக்குள் பூச்சிகள், எறும்புகள் எளிதாக புகுந்து விடுகின்றன. சீனாவில் வாலிபர் ஒருவரின் காதில் கரப்பான் பூச்சி ஒன்று முட்டையிட்டு 25 குஞ்சுகள் பொறிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இதனை கண்டுபிடித்து மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Earache may have any number of causes but spiders are not usually one of them. For a woman in south Wales, however, it turned out to be the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X