For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் "டக் போட்"

Google Oneindia Tamil News

எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கப்பல் குறித்து நல்ல செய்தி ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது.

Recommended Video

    Suez கால்வாயில் நிற்கும் Ever Green கப்பல் லேசாக திரும்பியுள்ளது

    மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சத சரக்கு கப்பல்களில் ஒன்றான 'எவர் கிவன்' கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான ஷார்ட் கட் கடல்வழி பகுதியாகும் இது.

    இங்கு கடந்த வாரம் 2 லட்சம் டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற 'எவர் கிவன்' கப்பல் தரைதட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக மோதி... மொத்த போக்குவரத்தையும் மறைக்கும் வகையில் தரைதட்டியது.

    தரைதட்டியது

    தரைதட்டியது

    இந்த 'எவர் கிவன்' கப்பல் தைவான் நிறுவனமான 'எவர் கிரீன் மெரைன்' மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதை இயக்கியது முழுக்க முழுக்க இந்தியர்கள். இந்த கப்பல் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை மறைத்த காரணத்தால் இரண்டு பக்கமும் 150க்கும் அதிகமாக கப்பல்கள் தேங்கி நிற்கிறது. கிட்டத்தட்ட உலகின் 15% கடல் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    பாதிப்பு

    பாதிப்பு

    உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் இதனால் பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த 'எவர் கிவன்' கப்பல் மொத்தம் 400 மீட்டர் நீளம் கொண்டது. கிட்டத்தட்ட இதில் தற்போது 20 ஆயிரம் கண்டெயினர்கள் உள்ளது.

     பிளான் ஏ

    பிளான் ஏ

    இந்த 'எவர் கிவன்' கப்பலை தரை தட்டியதில் இருந்து மீட்க இரண்டு விதமான பிளான்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இழுவை கப்பல்கள் எனப்படும் டக் போட்களை வைத்து இந்த 'எவர் கிவன்' கப்பலை இழுக்க முயன்று வருகிறார்கள். இழுவை கப்பல்கள் என்பது இன்னொரு கப்பலில் கயிறை கட்டி இழுக்கும் கப்பல் ஆகும். இதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக 'எவர் கிவன்' கப்பலை திசை மாற்றி வருகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த கப்பல் தரை தட்டிய வேகத்தில் பல லட்சம் மணல் மற்றும் களிமண் கப்பலுக்கு கீழே சேர்ந்துவிட்டது. இதனால் இழுவை கப்பல்களை வைத்து இதை இழுக்கும் முன் முதலில் களிமண்ணை புல்டோசர் மூலம் அகற்ற வேண்டும். இதற்கான பணிகள்தான் தற்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் மணலை அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுவரை பல்லாயிரம் டன் களிமண் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.

    லேசாக மாறியது

    லேசாக மாறியது

    இதுவரை மணல்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் லேசாக தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இந்த கப்பல் சில சென்டிமீட்டர்கள் திரும்பி உள்ளது. கப்பல் லேசாக திரும்பி உள்ளது. இந்த இழுவை மேஜிக்தான் கைகொடுத்துள்ளது. கப்பலின் ரட்டர்களை இயக்கி லேசாக அதை திருப்பி உள்ளனர். ஆனால் இன்னும் பல லட்சம் டன் மணலை நீக்கினால் மட்டுமே கப்பலை மொத்தமாக திருப்ப முடியும். அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.

    இழுவை

    இழுவை

    இதற்காக 150 இழுவை கப்பல்களை கொண்டு வர உள்ளனர். 150 இழுவை கப்பலை இந்த வாரமே களமிறக்கி. தேர் போல இந்த சூயஸ் கப்பலை இழுக்க போகிறார்கள். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பிளான் பி ஒன்றையும் களமிறக்க உள்ளனர் . அதன்படி இந்த கப்பலில் இருக்கும் கண்டெயினர்களை நீக்கும் முடிவில் உள்ளனர்,.

    நீக்கம்

    நீக்கம்

    கன்டெய்னர்களை நீக்கினால் எடை குறையும். இதன் மூலம் கப்பலை இழுப்பது எளிதாகும். இத்தனை நாட்கள் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் இதை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கண்டெயினர்கள் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள். மொத்தமாக கப்பலை திருப்ப குறைந்தது ஒருவாரமாவது ஆகும் என்கிறார்கள்.

    English summary
    Suez Canal: The ship has moved little with the help of Tug Boats, may float soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X