For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20014ம் ஆண்டுக்கான திறமையான நாடுகள் பட்டியல்: இந்தியாவின் இடத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?

By Siva
Google Oneindia Tamil News

பெர்ன்: ஐஎம்டியின் திறமையான உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 48வது இடம் தான் கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐஎம்டி என்ற முன்னணி பிசினஸ் ஸ்கூல் திறமையான உலக நாடுகள் பற்றி 60 நாடுகளில் உள்ள 4 ஆயிரத்து 300 எக்சிகியூட்டிவ்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் திறமையான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Switzerland 1st, India 48th in IMD World Talent Report 2014

அந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு மலேசியா தான். 2005ம் ஆண்டு 20வது இடத்தில் இருந்த மலேசியா இந்த ஆண்டு 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனி, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களுக்குள் உள்ள பிற நாடுகள் ஆகும். ஐஎம்டி பட்டியலில் இந்தியாவுக்கு 48வது இடம் தான் கிடைத்துள்ளது. 2005ம் ஆண்டு 29வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 48வது இடத்திற்கு சென்றுள்ளது.

2005ம் ஆண்டு 28வது இடத்தில் இருந்த பிரேசில் இந்த ஆண்டு 52வது இடத்திற்கு சென்றுள்ளது. ஐஎம்டி பட்டியலில் சிங்கப்பூருக்கு 17வது இடம் கிடைத்துள்ளது. உள்நாட்டில் உள்ள திறமை மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது, உள்நாட்டு திறமைகளை தக்க வைத்துக் கொள்வது, வெளிநாட்டு திறமைகளை ஈர்ப்பது, சந்தையின் தேவைகளை இருக்கும் திறமைகளை வைத்து பூர்த்தி செய்வது ஆகியற்றின் அடிப்படையில் தான் ஐஎம்டி பட்டியலை தயாரித்துள்ளது.

இந்தியாவில் தான் திறமைக்கு மதிப்பே இல்லை என்று படிப்பவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு அல்லவா பறந்துவிடுகிறார்கள்.

English summary
IMD has released world talent report 2014 in which India is in 48th position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X