இஸியா ஜெயிக்கலாம்.. 1992ல் இதுதான் நடந்தது.. டி20 பைனலில் பாகிஸ்தானுக்கு 2 ரகசியம் கூறிய இம்ரான் கான்
லண்டன்: உலககோப்பை டி20 போட்டி பைனலில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்நிலையில் தான் 1992ல் 50 ஓவர் உலககோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அப்போது அவர்கள் பின்பற்றிய முக்கிய 2 ரகசியத்தை தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.
தகுதி சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேற்றின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் கால் பதித்தன.

பாகிஸ்தான்-இங்கிலாந்து பைனல்
இதில் முதலாவது நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி தோற்றது. பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் அணியாக உலககோப்பை டி20 கிரிக்கெட் பைனலுக்குள் நுழைந்தது. 2வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 168 ரன்கள் குவித்தது. இதனை விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதனால் டி20 பைனலில் பாகிஸ்தானுடன் இங்கிலாந்து மோதுகிறது.

பாகிஸ்தான் பேட்டிங்
உலககோப்பை டி20 புதிய சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங்கை துவங்கி உள்ளது.

இம்ரான் கான் சொன்ன 2 விஷயம்
இந்நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த நாட்டின் மாஜி பிரதமருமான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு மெசேஜ் ஒன்றை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2 முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இம்ரான் கான் தனது ட்விட்டரில், ‛‛1992 உலகக் கோப்பை இறுதி போட்டியில் எங்கள் அணிக்கு நான் கூறிய விஷயத்தை தான் இன்றையை அணிக்கு நான் சொல்கிறேன். 1. உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவது என்பது அரிதாகவே கிடைக்கும். இதனால் அன்றைய தினத்தை அனுபவித்து விளையாட வேண்டும்.

2வது விஷயம் என்ன?
2. ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் வெற்றி பெறுவதோடு எதிரணியின் தவறுகளை சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அதன் அர்த்தம் என்னவென்றால் அட்டாக்கிங் மைண்ட்செட்டில் விளையாடுவது தான். நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். உங்கள் வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது'' என கூறியுள்ளார். முன்னதாக 1992 உலககோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் தான் இம்ரான் கான் தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு அட்வைசுடன் கூடிய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

2வது முறை சாம்பியன் யார்?
இன்றைய இறுதிபோட்டியில் மோதும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனே உலககோப்பை டி20 கோப்பையை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி 2009ல் கோப்பையை வென்ற நிலையில் இங்கிலாந்து அணி 2010ல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக உலககோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வெல்லும். தற்போதைய சூழலில் மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுமே 2 முறை(2012, 2016) உலககோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இன்று வெற்றி பெறும் அணி மேற்கு இந்திய அணியுடன் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications