ஆப்கானிஸ்தானில் திருப்பம்.. 85% நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபன்கள்.. உலக நாடுகள் கவலை
காபூல்: ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.
தாலிபன்களின் தலைவனான பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஏறக்குறைய 20 ஆண்டுகால தாலிபான்களுடன் சண்டை போட்டு ஒரு கட்டத்தில் ஓய்ந்து விலகி விட்டனர். இதன் பின்னர் தொடங்கப்பட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே தலிபான்கள் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை ஆப்கான் அரசு அதிகாரிகள் முற்றாக நிராகரிக்கிறார்கள்
ஆனால் உள்ளூர் ஆப்கானிய அதிகாரிகளோ, ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு முக்கியமான மாவட்டத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக கூறுகிறார்கள். துர்க்மெனிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு நகரமான டோர்குண்ட் நகரத்தை ஒரே இரவில் தலிபான்களால் கைப்பற்றப்பட்டதாக ஆப்கான் அரசு படை அதிகாரிளும், தலிபான்களும் தெரிவிக்கிறார்கள்

உலக நாடுகள் கவலை
சண்டையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானிய பாதுகாப்பு படையினர் மற்றும் அகதிகள் எல்லையைத் தாண்டி அண்டை நாடான ஈரான் மற்றும் தஜிகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் இந்த முன்னேற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா உள்பட பல்வேறு மேற்கு நாடுகள் , ஆப்கானினிஸ்தானில் இனி தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கவலை அடைந்துள்ளன.

தாலிபான்கன் பேச்சு
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற மூன்று தலிபான் அதிகாரிகள் , ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்ய முயன்றனர். ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசை செயல்படுத்த நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் . ஆனால் எங்கள் பிரதேசங்கள் ஒருபோதும் நம் அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படாது" என்று தலிபான் அதிகாரிகளில் ஒருவரான ஷாஹாபுதீன் டெலவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் 85% பிரதேசங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன என்பதை நீங்களும் முழு உலக சமூகமும் சமீபத்தில் அறிந்திருக்கலாம்" என்றும் அவர் கூறினார்

அமெரிக்கா பதில்
இதனிடையே தலிபான்கள் எவ்வளவு பிரதேசத்தை வைத்திருந்தார்கள் என்று கேட்டதற்கு, அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேரடி கருத்தை மறுத்துவிட்டார். சி.என்.என் உடனான ஒரு நேர்காணலில் அவர் கூறும் போது "நிலப்பரப்பை கைப்பற்றுவதால் நீங்கள் அதை தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் காலம் முழுக்க தக்க வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. ஆப்கானிய படைகள் களத்தில் இறங்குவதற்கான நேரம் இது என்று நான் நினைக்கிறேன் .அவர்கள் களத்தில் இருக்கிறார்கள் - தங்கள் நாட்டை, தங்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் அதற்கான திறனைப் பெற்றுள்ளனர். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது," என்று அவர் கூறினார்.

மனித உரிமை மீறல்கள்
சண்டை தொடர்வது பற்றி , உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரி ஒருவர் கூறும் போது , ஆப்கானிஸ்தானில் மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதற்கு சுகாதார ஊழியர்கள் சிரமப்படுவதாக கூறினார். உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அவசரகால இயக்குனர் ரிக் ப்ரென்னன், கூறும் போது. குறைந்தது 18.4 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது, இதில் 3.1 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு அபாயத்தில் உள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கான அணுகல் இல்லாதது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications