கிளம்புங்க கிளம்புங்க.. ஆண் துணையின்றி வந்த பெண்களுக்கு விமான அனுமதி மறுப்பு.. தாலிபான்கள் அட்ராசிட்டி
காபூல் : தாலிபான்கள் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் வந்ததால் பெண்களை விமானங்களில் ஏற விடாமல் தலீபான்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆப்கானின் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு உலக நாடுகள் அந்நாட்டு தூதரக உறவை உதவிகளையும் நிறுத்திவிட்டன.
பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானை தனிமைப்படுத்தி நிலையில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அமெரிக்கா, சர்வதேச நிதியம், உலக வங்கி போன்றவை ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விட்டன.

ஆப்கான் உணவும் பஞ்சம்
இந்த நிலையில் அந்நாட்டில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் மக்களின் பசிப்பிணி போக்க உதவ வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதித்த உலக பணக்காரர்கள் தற்போது ஆப்கான் மக்களின் பசியை தீர்க்க முன்வரவேண்டும் எனவும் ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள் விற்கப்படும் அவலம்
பசிக்காக ஒரு பெண் தனது மகளை வேறு ஒரு குடும்பத்திற்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக கூறினார்,. தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும் நிலைமையில் இருக்கின்றனர் எனவும், ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்பறிப்பு தண்டனை
ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது எனவும், அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தும் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புக நினைத்தாலும் தாலிபான்கள் உயிர்பறிப்பையே தண்டனையாக வழங்குவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனுமதி மறுப்பு
இந்நிலையில் ஆண்கள் துணையில்லாமல் வந்ததால் பெண்களை விமானங்களில் ஏற விடாமல் தலீபான்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஏறுவதற்காக வெள்ளிக்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் இல்லை என்பதால் அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் கனடா, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்தவர்கள் ஆவர்" என கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications