For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலாக தமிழர் நியமனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Tamil origin judge appointed Singapore Attorney general
சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த வி.கே.ராஜா சிங்கப்பூரின் எட்டாவது அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1957ம் ஆண்டு பிறந்த விஜயகுமார் ராஜா (வி.கே.ராஜா ) சிங்கப்பூர் சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இதன்பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுநிலை கல்வியை முடித்தார். இவரது தந்தை, தம்பூர் தம்பி ராஜா, சிங்கப்பூர் இடதுசாரி அரசியல் கட்சியாக விளங்கிய பார்சியன் சோசியலிஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். டி.டி.ராஜா என்றால் சிங்கப்பூர்வாசிகளுக்கு எளிதில் தெரியும்.

வி.கே.ராஜா, 2004ம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிக்கு வந்தார். இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் டோனி டேன் கெங் யாம், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வி.கே.ராஜாவை, நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நியமித்துள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எட்டாவது அட்டார்னி ஜெனரலாக வி,கே.ராஜா இன்று முதல் பதவிவகிக்க உள்ளார். அத்துடன், சிறுபான்மை நலனுக்கான குடியரசு கவுன்சில் உறுப்பினராகவும் வி.கே.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Justice V K Rajah, an Indian-origin judge, was on Wednesday appointed as the eighth Attorney-General of Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X