For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த 8 பேர் இதுவரை மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த 8 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பாங்காங்: தாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 4 சிறார்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் கடந்த ஜூன் 23-ஆம் தேதி சிக்கிக் கொண்டனர். கடந்த 12 நாட்களாக அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள். நேற்றைய தினம் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

Thailand football team who trapped in Cave is rescuing one by one

அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அது வழியாக தண்ணீரை உறிஞ்சி மாணவர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் 90 பேர் கடலில் ஸ்கூபா டைவிங் செய்யும் மீட்பு பணியாளர்கள் இந்த பணிக்காக களமிறங்கி இருக்கிறார்கள். இவர்கள் முதல் கட்டமாக நேற்றைய தினம் 6 சிறுவர்களை மீட்டனர். இரண்டாம் கட்ட மீட்பு பணிகள் நடந்தன. இதில் இருசிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

மீதமுள்ள 4 சிறுவர்களையும் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

English summary
A total of 8 of the 12 boys have now been brought out of a flooded cave in northern Thailand, according to the local governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X