For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: பல மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவு! இன்றே தேர்தல் முடிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெற உள்ளது. இதனிடையே அதிகாலை 4.30 மணிக்கு கென்டக்கி மற்றும், இன்டியானா பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

The exact time and the date of the US Elections 2016 for Indian viewers

இந்திய நேரப்படி வாக்குப்பதிவு முடிவடைய உள்ள மாகாணங்கள் குறித்த ஒரு பார்வை:

4:30 AM (இந்திய நேரம்) - இன்டியானா மற்றும் கென்டக்கி பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

5:30 AM (இந்திய நேரம்) - ஃபுளோரிடா, விர்ஜினியா, ஜார்ஜியா, சவுத் கலிபோர்னியா மற்றும் வெர்மோன்ட் பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

6:00 AM (இந்திய நேரம்) ஒகியோ, நார்த் கலிபோர்னியா, வெஸ்ட் விர்ஜினியா (ட்ரம்ப்பின் ஆதரவு மாகாணம்) பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

6:30 AM (இந்திய நேரம்) பென்சில்வேனியா, மிசிகான், அலபாமா, கனெக்டிகட், டெலாவேர், கொலம்பியா டிஸ்ட்ரிக்ட், இல்லினோயிஸ், கன்சாஸ், மேயின், மேரிலேன்ட், மஸ்சாசுசெட், மிஸ்சிஸ்சிபி, மிசோரி, நியூ ஜெர்சி, ஒக்லஹோமா, ரோடே தீவு, டென்னஸ்சி பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

7:30 AM (இந்திய நேரம்) கொலராடோ, விஸ்கோன்சின், டெக்சாஸ், லோயிசியானா, மினஸ்டோ, நெப்ராஸ்கா, நியூ மெக்சிகோ, நியூயார்க், தெற்கு டகோடா, வையோமிங் பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுறும்.

8:30 AM (இந்திய நேரம்) அரிசோனா, இடாகோ, மோன்டானா, நெவதா, உடா மற்றும் இவோவா பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெறும்.

9:30 AM (இந்திய நேரம்) கலிபோர்னியா, வாஷிங்டன் மாகாணம், ஒரேகான் மற்றும் வடக்கு டகோடா பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெறும்.

10:30 AM (இந்திய நேரம்) இறுதியாக, அலாஸ்கா மற்றும் ஹவாய் மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெறும். அத்துடன், அமெரிக்க அதிபர் தேர்தல் முற்று பெறும். இதன்பிறகு முன்னணி நிலவரம் வெளியாகும்.

English summary
The exact time and the date of the US Elections 2016 for Indian viewers have been mentioned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X