'மிக பெரிய தவறு செய்துவிட்டோம்..' ஒரே வாரத்தில் 500% அதிகரித்த கொரோனா.. புலம்பும் நெதர்லாந்து அதிபர்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிய ஒரே வாரத்தில் அங்கு வைரஸ் பாதிப்பு சுமார் 500% வரை அங்கு அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது கொரோனா தொற்று தான். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து வளர்ந்த நாடுகளும் கொரோனாவை எதிரக்கொள்ளத் திணறின.
இதுவரை எந்தவொரு நாடும் கொரோனாவை முழுவையாகக் ஒழித்துவிடவில்லை. தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் மட்டுமே உள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்
அதிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனால் ஒரு நாட்டில் சில மாதங்கள் கொரோனா குறைந்ததது போலத் தோன்றினாலும், மீண்டும் அடுத்த அலையில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும்போது, உச்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

நெதர்லாந்து அரசு
தற்போது நெதர்லாந்து நாட்டில் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அங்கு இத்தனை காலமாகக் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் வைரஸ் பாதிப்பும் கட்டுக்குள் இருந்தது. இதனால் கொரோனா அச்சுறுத்தல் கடந்துவிட்டதாகக் கருதிய நெதர்லாந்து அரசு. ஜூன் மாதம் இறுதியில் இரவு விடுதிகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

500% அதிகரித்த கொரோனா
அப்போது முதலே அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 52,000 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய வாரத்தைவிட 500% மடங்கு அதிகமாகும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து மிகப் பெரிய பிழையை செய்துவிட்டதாகக் மக்களிடம் மன்னிப்பு கேட்ட அந்நாட்டுப் பிரதமர் மார்க் ருட்டே, ஊரடங்கில் மேலும் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

மோசமான பாதிப்பு
அங்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 37% பேருக்கு இரவு விடுதிகளிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 18-24 வயதுடையவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு 262% வரை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதும் 11% வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
13 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நெதர்லாந்து நாட்டில் இதுவரை 46% பேருக்கு கொரோனா வேக்சின் இரண்டு டோஸ் முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள்தொகையில் 77% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நாட்டிலுள்ள 70-90% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் அளித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

டெல்டா கொரோனா
உலகின் மற்ற நாடுகளைப் போலவே நெதர்லாந்து நாட்டிலும் தற்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க டெல்டா கொரோனாவே முக்கிய காரணமாக உள்ளது. அங்கு தற்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் மிக மோசமான கொரோனா 2ஆம் அலை பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications