For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பர்த்டே'வுக்கு நாம தப்புத் தப்பா கேக் வெட்றோமாம்.. இப்டித் தான் நீளமா வெட்டனுமாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: மேற்கத்திய கலாச்சாரங்களில் முக்கியமானது கேக் வெட்டிவது. ஆனால், இந்தியாவிலும் பிறந்தநாள், திருமண நாள் என தற்போது அனைத்து சந்தோஷமான நிகழ்வுகளிலும் கேக் வெட்டிக் கொண்டாடும் கலாச்சாரம் பரவி வருகிறது.

நம்மவர்கள் சிலர் கேக்கை வெட்டி சாப்பிடுவதற்கு முன்னர் அதை கையில் எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் தடவி களேபரப்படுத்தி விடுவதும் உண்டு.

ஆனால், பொதுவாக முக்கோண வடிவில் கேக் வெட்டப்படுவது என்பதே தவறான முறை என புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் லண்டனைச் சேர்ந்த கணித ஆய்வாளர் ஒருவர்.

முந்தைய ஆய்வு...

முந்தைய ஆய்வு...

கடந்த நூறாண்டுகளுக்கு முன்னர் பிரான்சிஸ் கல்டன் என்ற விஞ்ஞானி கேக் வெட்டுவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளார். அதனை மேற்கோள் காட்டி தற்போது லண்டனைச் சேர்ந்த கணித ஆய்வாளர் அலெக்ஸ் பெல்லோஸ் என்பவர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யூடியூப் வீடியோ...

யூடியூப் வீடியோ...

அதில், காலங்காலமாக கேக்குகளை முக்கோண வடிவில் வெட்டுவது தவறு எனவும், இதன் மூலம் கேக் விரைவில் காய்ந்து விடும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துல்ளார் அலெக்ஸ். இத்தகவலை செயல் முறை விளக்கமாக வீடியோவாக எடுத்து யூடியூப்பில் அலெக்ஸ் வெளியிட்டுள்ளார்.

முக்கோண கேக் துண்டு...

முக்கோண கேக் துண்டு...

அந்த வீடியோவில், அலெக்ஸ் முதலில் வட்ட வடிவமான கேக் ஒன்றை எடுத்துக் கொள்கிறார். அதிலிருந்து முக்கோண வடிவில் சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுக்கிறார். பின்னை மீதமுள்ள கேக்கின் பக்கங்கள் காய்ந்து விடுவதாக அவர் தெரிவிக்கிறார்.

அறிவியல் பூர்வமாக...

அறிவியல் பூர்வமாக...

அதேசமயம், கேக்கை வேறு ஒரு முறையில் அறிவியல் பூர்வமாக வெட்டினால் இவ்வாறு காயாது என அவர் விளக்குகிறார். அதற்கு சான்றாக மற்றொரு கேக்கை எடுத்து வெட்டிக் காண்பிக்கிறார்.

நீளவாக்கில் கேக்துண்டு...

நீளவாக்கில் கேக்துண்டு...

இம்முறை முக்கோணமாக வெட்டுவதற்குப் பதிலாக நடுவில் நீளவாக்கில் வெட்டி ஒரு துண்டை வெளியில் எடுக்கிறார். பின்னர், மீதமுள்ள கேக்குகளை இணைத்து வைக்கிறார். இதன் மூலம் கேக்கின் உள் பாகங்கள் காய வாய்ப்பில்லை என அவர் விளக்குகிறார்.

வடிவம் மாறாது...

வடிவம் மாறாது...

பின்னர் மீண்டும் நீளவாக்கில் மற்றொரு துண்டை வெட்டுகிறார். இம்முறையும் கேக்கை பழையபடியே சேர்த்து வைக்கிறார். இதனால், கேக் அதன் வடிவம் மாறாது வட்டமாக உள்ளது.

பேரலல் கேக் கட்டிங்...

பேரலல் கேக் கட்டிங்...

தொடர்ந்து இவ்வாறு அனைத்து துண்டங்களையும் வெட்டி எடுத்து விடுகிறார் அலெக்ஸ். இம்முறைக்கு பேரலல் கேக் கட்டிங் எனப் பெயராம்.

English summary
A London based mathematician claims that cutting your cake in triangular slices is totally wrong. Alex Bellos seems to have figured out the perfect way of cutting cakes. The method that he suggests, heavily draws from a technique which was propounded about a hundred years ago by an by English scientist called Francis Galton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X