For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம்.. அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்

Google Oneindia Tamil News

சிலி: லத்தீன் அமெரிக்காவின் சிலி, அர்ஜண்டினா உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 10.30 மணியளவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மிகவும் அரிதான இந்த நிகழ்வின் காட்சிகள் வெளியாகி உள்ளன..

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது கிரகணங்கள் எனும் அரிய நிகழ்வு வானில் நடக்கும். சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய நிகழ்வே ஆகும். அத்தகைய அரிய நிகழ்வானது நேற்றிரவு நிகழ்ந்தது.

The solar eclipse has been seen in Latin America, including Chile and Argentina

மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடித்தது. இந்த வருடத்தில் நிகழ்ந்த முதல் சூரிய கிரகணமும் இதுவே. சிலி, அர்ஜண்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் காட்சியளித்தது. இக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்பதால் தொலை நோக்கி வாயிலாக பலர் கண்டு ரசித்தனர். இந்தியாவில் இரவாக இருந்ததால் இவ்விந்தையை காண முடியவில்லை.

கூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள்கூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள்

அதே சமயம், சூரிய கிரகணத்தை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை புனித நீராடி வழிபாடு செய்தனர்.

குறிப்பிட்ட ஒரே இடத்தில் முழு சூரிய கிரகணம் 375 வருடங்களுக்கு ஒரு முறை தான் தோன்றும். சூரிய கிரகணம் முழுமை அடையும் காலம் 2 வினாடிகளில் இருந்து 7 நிமிடம் 30 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். 21-ம் நூற்றாண்டில் அதிக நேரம் தோன்றிய முழு சூரிய கிரகணம் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் நாள் 6 நிமிடம் 39 வினாடிகளுக்கு முழுமையாக நீடித்திருந்தது. 7 நிமிடம் 24 வினாடி அளவிற்கு அதிக நேரம் நிகழும் அடுத்த முழு சூரிய கிரகணம் வருகிற 2,186-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் நாள் தோன்றும் என விஞ்ஞானிகள் கணித்து இருக்கிறார்கள்.

English summary
The eclipse has been seen in Chile, Argentina and the South Pacific Ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X