• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவுக்கு வெற்றிகரமான மருந்து.. இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.. உலக சுகாதார அமைப்பு வார்னிங்

|

ஜெனிவா: கொரோனா வைரஸுக்கு "பயனுள்ள தடுப்பூசிகள்" கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்", முழுமையான தீர்வை தரும் வெற்றிகரமான மருந்து இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

  இப்போதிருந்தே vaccine கொடுக்கலாம்... நிபுணர்கள் ஆலோசனை

  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில், 18,102,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 689,625 பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ள 3 நாடுகள் ஆகும்.

  இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  கொரோனா வைரஸ்...பிசிஜி ஊசி உயிரிழப்பை குறைக்கும்...புதிய ஆய்வில் தகவல்!!

  வெற்றிகரமானவை அல்ல

  வெற்றிகரமானவை அல்ல

  அவர் ஜெனிவாவில் இந்த அறிக்கை வாசித்து பேசியதாவது: "பல தடுப்பூசிகள் இப்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. மேலும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகளைக் கொண்டிருப்போம் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், இப்போதைக்கு 100 சதவீதம் வெற்றிகரமாக குணப்படுத்த்க்கூடிய மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை.

  முககவசம் அணிதல்

  முககவசம் அணிதல்

  இப்போதைக்கு, கொரோனா பரவலை தடுக்க, பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும். உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் மைக் ரியான் அனைத்து நாடுகளையும் முககவசம் அணிதல், சமூக விலகல், கை கழுவுதல் மற்றும் சோதனை போன்ற சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  சமூக இடைவெளி

  சமூக இடைவெளி

  இப்போதைக்கு, கொரோனா பரவலை நிறுத்துவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படைகளை பின்பற்ற வேண்டும் . நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல். இதையெல்லாம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், சமூகத்திற்கு தொற்று குறித்து புரிதலை எற்படுத்துதல், பரவலை கட்டுப்படுத்த அரசு உரிய அதிகாரம் அளித்தல், முகமூடி அணிதல்,, தவறாமல் கைகளை சுத்தம் செய்வது மற்றும் மற்றவர்களின் இருமல் பிறருக்கு பராமவல் தடுத்த போன்றவற்றை செய்ய வேண்டும். .

  ஒற்றுமை அவசியம்

  ஒற்றுமை அவசியம்

  ​ சுகாதார அமைப்பை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள், தொடர்புத் தடமறிதல் மற்றும் சீர்குலைந்த சுகாதார சேவைகள் சீக்கிரம் மறுதொடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.. பாதுகாப்புகளையும் கண்காணிப்பையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இன்று நாம் ஒன்றாகச் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும், அனைவரும் சேர்ந்து வாழ்வாதாரங்களை காப்பாற்ற முடியும்" இவ்வாறு கூறினார்.

  உலக சுகாதார அமைப்பு

  உலக சுகாதார அமைப்பு

  கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க சீனாவுக்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் குழுவினரை பற்றி அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் , "சீனாவுக்குச் சென்ற உலக சுகாதார அமைப்பின் குழு இப்போது வைரஸ் தோற்றத்தை அடையாளம் காண மேலும் கூட்டு முயற்சிகளுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தங்கள் பணியை முடித்துவிட்டது. இந்த முயற்சிகளின் விளைவாக உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஒரு சர்வதேச அணிக்கான ஆய்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கான விதிமுறைகளை சீன வல்லுநர்கள் வரைவு செய்துள்ளனர். சர்வதேச குழுவில் சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். வைரஸை அடையாளம் காண வுஹானில் தொற்றுநோயியல் ஆய்வுகள் தொடங்கும் என்றார்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  "There is no silver bullet at the moment and there might never be," WHO director-general Tedros Adhanom Ghebreyesus said.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X