For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரம்ப் ஜெயித்து ஜனாதிபதி ஆனால் இந்தியர்களை வெளியேற்றி விடுவார்.. 3வது வகுப்பு பையனின் அதிரடி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்துள்ள கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஒரு வினோதமான சவால் வந்துள்ளது. ஒரு சிறுவன் அவரைப் பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளான். அவன் கேட்ட கேள்விகள்தான் இப்போது வைரல் ஆகியுள்ளன.

அந்தப் பையன் தனது நோட்டில் எழுதியிருந்த அந்தக் கேள்விகளையும், டிரம்ப்பை விமர்சித்திருந்ததையும் அவது ஆசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.

3வது வகுப்புப் பசங்க இந்த நாட்டை நடத்தலாம் என்றும் அவர் அதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். அது இப்போது வைரல் ஆகியுள்ளது. கொலம்பஸைச் சேர்ந்தவன் அந்த சிறுவன்.

3வது வகுப்புப் பையன்

3வது வகுப்புப் பையன்

அந்த சிறுவன் 3வது கிரேட் படித்து வருகிறான். தனது நோட்டுப் புத்தகத்தில் அவன் எழுதியுள்ள வாசகங்கள் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.

இந்தியர்களைப் பற்றியும்

இந்தியர்களைப் பற்றியும்

அந்த சிறுவனின் குறிப்பில் இந்தியர்களைப் பற்றியும் இடம் பெற்றுள்ளது. இந்தியர்களின் முக்கியத்துவத்தை அவன் அழகாக எடுத்துரைத்துள்ளான். பிற நாட்டுத் தொழிலாளர்கள் குறித்த டிரம்ப்பின் இனவெறி கொள்கைகளையும் இச்சிறுவன் விமர்சித்துள்ளான்.

சிறுவனின் கடிதம்

சிறுவனின் கடிதம்

டிரம்ப் குறித்த அந்த கடிதத்தின் தலைப்புக்கு எனது 2016ம் ஆண்டு கனவு என்று தலைப்பிட்டுள்ளான் அச்சிறுவன். அந்தக் கடிதத்தில் சிறுவன் குறிப்பிட்டுள்ளதாவது: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகக் கூடாது. இதுதான் எனது கனவு.

ஆசியர்கள் போய் விடுவார்கள்

ஆசியர்கள் போய் விடுவார்கள்

அவர் ஜனாதிபதி ஆனால், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெக்சிகர்கள் அவர்களது நாட்டுக்குப் போய் விட வேண்டிய நிலை வரும். அவர்கள் போய் விட்டால் அமெரிக்காவின் மக்கள் தொகை 1,20,000 குறைந்து போய் விடும்.

இந்தியர்கள் போய் விட்டால்

இந்தியர்கள் போய் விட்டால்

இப்போது பெரும்பாலான என்ஜீனியர்கள் இந்தியர்களாக உள்ளனர். அவர்கள் போய் விட்டால் தொழில்நுட்பம் போய் விடும். டெக்னாலஜி இல்லாவிட்டால்
நெட்பிளிக்ஸ் இருக்காது. நெட் பிளிக்ஸ் இல்லாவிட்டால் பொழுது போகாது.

இப்படிப்பட்ட நிலை தேவையா

இப்படிப்பட்ட நிலை தேவையா

இப்படிப்பட்ட உலகம் எனக்கு வேண்டாம். எனவே டிரம்ப் ஜனாதிபதி ஆகக் கூடாது என்பதே எனது கனவு என்று கூறியுள்ளான் அந்த சிறுவன்.

English summary
US a third Grader uses Netflix analogy to explain Why Donald Trump shouldn’t be the President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X