கேக்கை தொட்டால் கேட்காமலே கொட்டும் கரன்சி.. மாமியாரை கவர மருமகள் அசத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீஜிங் : பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தை பார்த்துள்ளீர்கள். அதேபோல் பணம் கொடுக்கும் ஏடிஎம் கேக்கை கேள்விப்பட்டுள்ளீர்களா.

தற்போது கேக் எனப்படுவது பிறந்தநாள் மட்டுமல்லாமல் நிச்சயதார்த்தம், திருமணம், பெண் அழைப்பு உள்ளிட்ட வைபவங்களில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இந்த கேக்கானது பல்வேறு வடிவங்களில், சுவைகளில் கிடைக்கின்றன.

இவற்றை முன்தினமே ஆர்டர் செய்து மக்கள் சுவைத்து மகிழ்ந்து வருகின்றனர். இதன் விலையோ தேர்வு செய்யும் பிளேவருக்கு தகுந்தாற்போல் வசூலிக்கப்படுகிறது.

ஐஸ்கிரீம் கேக்

ஐஸ்கிரீம் கேக்

இன்றைய காலகட்டங்களில் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கேக்குகள், ஐஸ்கிரீம் கேக்குகள், போட்டோ பிரிண்ட் கேக்குள் என உள்ளன. இதன் வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல் கேக்கின் எடை மாறுபடும்.

மாமியாருக்கு கிப்ட்

மாமியாருக்கு கிப்ட்

சரி விஷயத்துக்கு வருவோம். சீனாவில் மாமியாரின் பிறந்தநாளுக்கு ஏதாவது பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்று மருமகள் ஒருவர் மண்டையை பிய்த்து கொண்டிருந்தார். துணிமணிகள், அழகு சாதன பொருள்கள் என வாங்கி கொடுத்து போர் அடித்து விட்டதாம்.

ஸ்பெஷல் கிப்ட்

ஸ்பெஷல் கிப்ட்

அதனால் ஸ்பெஷல் கிப்டாக வாங்க வேண்டும். அதே நேரம் மாமியாருக்கு பயனுள்ளதாகவும், அவரை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதாகவு்ம இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவு ஏடிஎம் கேக்.

பணம் வரும் கேக்

பணம் வரும் கேக்

ஒரு பேக்கரிக்கு சென்ற அந்த பெண், பட்டனை அழுத்தினால் ஏடிஎம்மை போல் காசு வரும் கேக் ஒன்றை ஆர்டர் செய்தார். அதை மாமியாருக்கு பரிசாக கொடுத்தார். அப்போது மாமியார் கேக்கின் நடுவே உள்ள பட்டனை அழுத்தியபோது அந்த கேக்கின் உள்ளே இருந்த பணம், ஏடிஎம்மில் இருந்து வெளியே வருவதை போல் வந்தது மாமியாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A genius came up with the idea of combining a birthday cake with a nice present and the result is this masterpiece - a cake that spits out money.
Please Wait while comments are loading...