For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா!

சிவப்பு நிறத்தில் இந்தோனேஷியா வான்வெளி காட்சி அளிக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா!-வீடியோ

    ஜாம்பி, இந்தோனேசியா: சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் கண்கள் படு சிவப்பாக காட்சி தரும். அந்த மாதிரி மாறிப் போன வானத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்கள் இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தைச் சேர்ந்த மக்கள்.

    அருகாமையில் உள்ள வனப் பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ காரணமாகவே வானம் சிவப்பு நிறமாக மாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

    This is not mars, Indonesia sky looksred colour due to fire

    இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில் திடீரென வானம் சிவப்பு நிறத்தில் மாறி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ யே காரணம். இப்படி காட்டுத் தீ நாடு முழுக்க பல முக்கிய வனப்பகுதிகளில் எரிந்து வருவதால் வானமே சிவப்பாக மாறிக் காணப்பட்டது.

    குறிப்பாக ஜாம்பியில் தான் நிலைமை மோசம். அங்கு சுவாசிக்க முடியாத அளவுக்கு புகை மூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. இதனால் மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனராம். இந்த மோசமான காட்சியை ஒருவர் வீடியோவில் எடுத்துப் போட அது வைரலாகி விட்டது.

    "இது இரவா பகலா என்று குழம்பாதீர்கள். இது பகல்தான். இரவு அல்ல" என்று அந்த வீடியோவை எடுத்த ஜூனி ஷோபி யாதுன் நிசா என்பவர் எழுதியுள்ளார். "இது பூமிதான். செவ்வாய் கிரகம் அல்ல. அது ஏதோ வேற்றுக் கிரகமும் அல்ல. இது நமது பூமிதான். சுவாசிக்க முடியாமல் திணறுகிறோம். சுத்தமான காற்று இல்லை. புகைதான் உள்ளது. எங்களுக்கு புகை வேண்டாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் கோ தி யங் என்பவர் கூறுகையில், காட்டுத் தீயின்போது வானத்தில் உள்ள சில துகள்களில் பற்றியதால் வானம் சிவப்பு நிறமாக காட்சி தருகிறது. இதுவே வானம் சிவப்பாக காட்சி அளிக்க முக்கிய காரணம் என்று விளக்கியுள்ளார்.

    சமீபத்தில்தான் அமேசான் வனப்பகுதி பற்றி எரிந்து உலக மக்களை அதிர வைத்தது. அதேபோலத்தான் தற்போது இந்தோனேசியாவும் மிகப் பெரிய காட்டுத் தீவிபத்தை கண்டு வருகிறது. உலகமே இப்படி பற்றி எரிந்து வந்தால் மக்கள் என்னதான் செய்வது..!

    English summary
    The sky over a province of Indonesia turned into dark blood red colour due to wild fire
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X