இந்த ஆட்டை பாருங்களேன்.. பிறந்து 1 மாதத்திலேயே.. காது மட்டும் கால் கிலோமீட்டர் போகுதே.. வாவ்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது பிறந்து ஒரு மாதம்தான் ஆன குட்டியாகும். தற்போது இந்த குட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. சாதாரணமாக பார்த்தால் வரிக்குதிரைகள் போல எல்லாம் ஒன்று போன்று தோன்றலாம். ஆனால் அந்த வரிக்குதிரைகளிலேயே ஒரு குதிரைக்கு இருக்கும் கோடுகளை போல வேறு எந்த குதிரைக்கும் இருக்காது. அதுபோலத்தான் தற்போது பாகிஸ்தான் நாட்டில் வளர்ந்து வரும் ஒரு ஆட்டுக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறப்பான காதுகள்
அப்படி என்ன அதன் சிறப்பியல்பு என கேட்கிறீர்களா?? அதன் காதுகள்தான் அதன் தனித்தன்மை. சும்மா இல்லிங்க. இந்த ஆட்டுக்குட்டியோட காது சுமார் 54 செ.மீ நீளம் கொண்டது. சரி இதுல என்ன தனித்தன்மைன்னு கேட்குறீங்களா? அது என்னன்னா... இந்த அளவு நீளமான காதுகளை கொண்ட ஆடு உலகத்தில் வேற எங்கையுமே கிடையாதுனு ஆட்டு ஓனர் சத்தியம் அடிச்சு சொல்றாரு. அப்படி இருந்தாலும் இது வெறும் 30 நாட்களே ஆன ஒரு குட்டி ஆடு. எனவே இந்த வயசுல இவ்வளவு பெரிய காது வெச்சு இருக்குற வேற ஆட்டுக்குட்டி உலகத்துல வேற இருக்கவே முடியாதுனு ஓனர் முகமது ஹசன் நரேஜோ உறுதியா சொல்றாரு.

பெயர் சிம்பா
அதுமட்டுமில்லீங்க இந்த ஓனரு, குட்டி அட்டுக்கு 'சிம்பா'னு பேரு வேற வச்சு இருக்காரு. பேரு வச்சோமா... புல்ல போட்டமா... பெருசா ஆனதுக்கு பிறகு விற்று வெட்டி அடுப்புல போட்டோமான்னு இருக்குற உலகத்தில், இந்த மனுசன் ஆட்டுக்குட்டிக்கு பால் ஊட்டுறது என்ன? சொக்கா தைச்சு போடுறது என்ன?? யப்பப்பா! சிம்பா மேல மனுசன் தீயா அன்பு காட்டுறாரு.

காதுக்கு பை
இவ்வளவு பெரிய காது வெச்சு குட்டி எப்படி நடக்கும்னு யோசிச்சு காதுகள் இரண்டையும் நடக்கும் போது தொந்தரவு பண்ணாம இருக்க அதுக்கு ஒரு பை தச்சு அதுக்குள்ள காதுகள் இரண்டையும் நுழைச்சு அதோட கழுத்து பட்டையிலேயே மாட்டி விட்டுடுறாரு. இதனால ஆடு மஜாவா துள்ளி ஓடுது.
Recommended Video

அழகி போட்டி
இது மட்டுமா? சிம்பா பொறந்த 10-12 நாட்களுக்குள்ளேயே சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துடுச்சு. மட்டுமில்லாம ஆடுகளுக்கான அழகி போட்டியில கலந்துகிட்டு பரிசு வேற ஜெயிச்சு இருக்கு. பரிசு, புகழ் என உலக கவனத்தை சிம்பா ஈர்த்ததால் அதன் ஓனர், உலகிலேயே மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி இதுதான்னு கின்னஸ்க்கு அப்ளை பண்ணி இருக்காரு. அதோட சேர்த்து குட்டி மேல யாரு கண்ணும் பட்டுவிடக்கூடாதுன்னு சாமிகிட்டையும் வேண்டி இருக்குறதா சொல்றாரு. இதெல்லாம் படிக்குற உங்களுக்கு "ஆடு வளக்குறது அழகு பாக்கறதுக்கில்ல, கோழி வளக்கிறது கொஞ்சுறதுக்கு இல்லங்கிற" சொலவடை நினைவுக்கு வந்தா நிர்வாகம் பொறுப்பேற்காது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications