For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரியாத்: வீட்டில் டியூசன் சொல்லித் தந்த 3 இந்திய ஆசிரியர்கள் கைது

Google Oneindia Tamil News

ரியாத்: பிரத்யேகமாக வீட்டில் வைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட டியூசன் சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய ஆசிரியர்களை ரியாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

தனிப்பட்ட முறையில் டியூசன் சொல்லித் தருவது சவுதி அரேபியாவில் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ரியாத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பிரபல பள்ளி ஒன்றில் கர்நாடகாவைச் சேர்ந்த மெகபூப் பாஸ்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த முகம்மது ரிபாய் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அஹமத் சித்திக் முதலியோர் ஆசிரியர்களாக உள்ளனர்.

இந்த ஆசிரியர்கள் மூவரும் தனிப்பட்ட முறையில் வீட்டில் வைத்து மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு தனிப்பட்ட டியூசன் நடப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் மூவரையும் கைது செய்தனர்.

ஆசிரியர்கள் கைது தொடர்பாக தகவலறிந்த பள்ளி நிர்வாகம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதித்தது. அதன் முடிவில் பள்ளியின் சார்பில் ஆசிரியர்களுக்கு ஜாமீன் கோருவது என முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Saudi Arabian police have arrested three Indian expatriate teachers for giving private tuition here, a media report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X