For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்தைப் பல்லைக் கொடுத்து விட்டு ‘ஷார்ட் டைம் மெமரி லாஸை’ வாங்கிய நிஜ "கஜினி"!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் ஷார்ட் டைம் மெமரி லாஸ் நோயால் பாதிக்கப்பட்டு, 90 நிமிடங்களில் நினைவுகளை இழக்கும் மனிதர் வாழ்ந்து வருகிறார்.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த வெற்றிப்படம் கஜினி. இப்படத்தில் 15 நிமிடத்தில் நினைவுகளை இழக்கும் ஷார்ட் டைம் மெமரி லாஸ் நோய் பாதிக்கப்பட்டவராக சூர்யா நடித்திருப்பார்.

15 நிமிடங்களுக்கு முன் நடந்ததை மறந்து, நாயகன் படும்பாடைப் படத்தில் பார்க்கும் போதே நமக்கு கண்ணைக் கட்டுகிறதே. ஆனால், நிஜத்தில் இப்படியான சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் லண்டனைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவர்.

பல் சிகிச்சைக்காக...

பல் சிகிச்சைக்காக...

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார் அவர். அப்போது அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, ரூட்கேனால் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்குப் பின்னர் தான் அவர் 90 நிமிடங்களில் அனைத்தையும் மறக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அரிய நோயாளி...

அரிய நோயாளி...

ஒவ்வொரு நாள் காலையிலும் தூங்கி எழுந்ததும் அவருக்கு தான் பல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்று வந்த நாள் மட்டும் தான் நினைவில் உள்ளதாம். இத்தகைய நினைவுப் பாதிப்பு இதற்கு முன் தான் கேள்விப் பட்டதில்லை என இவருக்கு சிகிச்சை அளித்துவரும் லைசெஸ்டெர் பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர் ஜெரால்ட் பர்கெஸ் கூறுகிறார்.

சான்றுகள் இல்லை...

சான்றுகள் இல்லை...

ஆனால், அவரது இந்த நிலைக்கு பல் மருத்துவர் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என்று கூறுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சை...

சிகிச்சை...

90 நிமிடங்களில் அனைத்தையும் மறந்து போகும் இந்த இளைஞருக்கு நார்த்தம்டன்ஷயர் சுகாதார அறக்கட்டளையைச் சேர்ந்த பானு சண்டலவடா உடன் இணைந்து சிகிச்சை மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் மருத்துவர் பர்கெஸ்.

மின்னணு டைரி...

மின்னணு டைரி...

ஆனால், அனைத்தையும் மறந்தாலும் அந்த இளைஞர் தன்னைப் பற்றிய நினைவுகளுடன் தான் வாழ்ந்து வருகிறாராம். கஜினி படத்தில் பார்ப்பவர்கள் அனைவரையும் புகைப்படங்களாக எடுத்து நினைவில் வைக்க முயற்சிப்பார் சூர்யா. அதேபோல், இந்த இளைஞரும் மின்னணு டைரி உதவியோடு மறந்தவைகளை நினைவுப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாராம்.

English summary
In a 'never-before-seen case', a man in the UK has been left with just 90-minutes of memory after a root-canal treatment after a dentist's appointment, researchers, including one of Indian-origin, say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X