நெருப்புடன் விளையாடாதீர்.. அமெரிக்கா எச்சரிக்கை; பொசுக்கிருவோம்.. வடகொரியா பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நெருப்புடன் விளையாடாதீர்கள் என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் குவாம் தீவு ராணுவ தளத்தை தாக்குவோம் என்று பதிலுக்கு வட கொரியாவும் எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

Trump: North Korea Threats will be met with Fire

இந்நிலையில் மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை எச்சரித்துள்ளா். நெருப்புடன் விளையாடாதீர். இதுவரை காணாத அமெரிக்காவின் கோபத்தை இந்த உலகம் கண்டுவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், சில மணி நேரங்களிலேயே வடகொரியா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் குவாம் தீவு அருகே உள்ள ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதிபர் கிம் ஜங்கின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

North State Employees Recovered in Karur-Oneindia Tamil

இந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவாம் தீவு அருகே அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல், ராணுவ தளம் உள்ளிட்டவை உள்ளதால் வட கொரியா ஏதாவது சேட்டை செய்து விடப் போகிறதே என்ற பதட்டமும் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North Korea says that it would attack America's army base in Quam island after US President warns North Korea that dont play with fire.
Please Wait while comments are loading...